selemengin poonaikal

செலமங்கின் பூனைகள்

ஒரு கற்பனை கதை - செலமங்கும், அவளுடைய பூனைகளும்!

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

செலமங்கிற்கு பூனைகளைப் பிடிக்கும். அவள் வீட்டில் பல பூனைகள் இருக்கின்றன.

செலமங்கிடம் ஒரு கருப்புப் பூனை இருக்கிறது. இந்த பூனை நிறைய இறைச்சி உண்ணும்.

செலமங்கிடம் ஒரு பெரிய பூனை இருக்கிறது. இந்த பூனை அனைத்தையும் உண்ணும்.

பூனை எண் மூன்று மரத்தின் மேல் ஏறுகிறது. இந்த பூனை மரத்தில் மாட்டிக் கொள்கிறது.

செலமங்கும் மரத்தின் மேல் ஏறுகிறாள். அவளும் பூனை எண் மூன்றுடன் மாட்டிக் கொள்கிறாள்.  செலமங்கின் அம்மா, அவர்கள் கீழே இறங்க உதவி செய்கிறார்.

செலமங்கிடம் இரண்டு சோம்பேறி பூனைகள் இருக்கிறது. அவை நாள் முழுவதும் வெயிலில் வெளியே படுத்து இருக்கும்.

செலமங்கிடம் மூன்று பரபரப்பானப் பூனைகள் இருக்கின்றன. அவை சமையல் அறையில் இருக்கும் எலிகளை இரவில் பிடிக்கின்றன.

செலமங்கிடம் ஒரு நாய் இருக்கிறது. அதன் பெயர் லிராபி. லிராபிக்கு நண்பர்கள் இல்லை. அந்த நாய் சோகமாக இருக்கிறது.

செலமங்கின் பூனைகளுக்கு லிராபியைப் பிடிக்காது. லிராபியை வீட்டை விட்டு பூனைகள் விரட்டின. லிராபி ஓடி விட்டது.

செலமங் லிராபியைக் கண்டுப்பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தாள். பூனைகள் மகிழ்ச்சியாகவில்லை. அந்த பூனைகளுக்கு லிராபியை மறுபடியும் பார்க்க விருப்பமில்லை.

செலமங் எத்தனைப் பூனைகள் வைத்து இருக்கிறாள்? அவள் எட்டுப் பூனைகள் வைத்து இருக்கிறாள்.

செலமங் எத்தனை நாய்கள் வைத்து இருக்கிறாள்? அவள் ஒரு நாய் வைத்து இருக்கிறாள். இப்பொழுது லிராபி எங்கே இருக்கிறது?

எத்தனை பூனைகள் உங்கள் வீட்டில் இருக்கிறது?

எத்தனை நாய்கள் உங்கள் வீட்டில் இருக்கிறது?