shall we go on a trip

பயணம் போகலாமா?

கீதாவுக்குப் பயணம் செல்ல ஆர்வமாக இருக்கிறது. அவள் அம்மாவிடம் விடுமுறைப் பயணத்தைப் பற்றிப் பேசுகிறாள்.

- Yamunah Balakrishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

"அம்மா! இந்த விடுமுறைக்கு நாம் எங்குப் போகலாம்?" என்று கீதா உற்சாகத்துடன் கேட்டாள்.

அம்மா நாம் உள்ளூரில் எங்காவது போகலாமா? அல்லது வெளியூருக்குப் போகலாமா?

கீதா, நாம் மலேசியாவுக்குப் போகலாமா?

"மலேசியாவா? அங்கே எப்படிப் போவது?" என்று கீதா கேட்டாள்.

"மறந்துவிட்டியா கீதா? நாம் இரண்டு வருடங்களுக்கு முன்னால் விமானத்தில் சென்றோமே!" என்றார் அம்மா.

"அம்மா! நான் இப்போதே என் பயணப்பெட்டியில் பொருள்களை எடுத்து வைக்கப் போகிறேன்" என்றாள் கீதா.

"உன் ஆர்வம் எனக்குப் புரிகிறது. நமக்கு இன்னும்  நேரம் இருக்கிறது. நாம் வார இறுதியில் பொருள்களை எடுத்து வைக்கலாமா?"  என்றார் அம்மா.

நம் புகைப்படக் கருவியை மறக்காமல் எடுத்துச் செல்லவேண்டும். நாம் செல்லும் சுற்றுலாத் தளங்கள் அனைத்தையும் நான் புகைப்படங்கள் எடுக்கப் போகிறேன்.

கீதா!  நீ செலவு செய்வதற்குப் பணத்தைச் சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.

நினைவுபடுத்தியதற்கு நன்றி அம்மா. மலேசியாவிற்குப் போக நான் ஆவலாக இருக்கிறேன்.

உங்களுக்கு எங்கே பயணம் போக ஆசையாக உள்ளது?