siri maane siri

சிரி, மானே, சிரி!

ஒரு குட்டி மான் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டது. ஆனால், ஒரு கல் அந்த மானைக் கீழே தடுக்கிவிட்டது. அப்புறம் என்ன ஆனது? தெரிந்துகொள்ள இந்தச் சுவையான கதையைப் படியுங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காட்டில் ஒரு மான்குட்டி ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டது.

அந்த மான்குட்டி முயலை முந்திச் சென்றது.

அந்த மான் யானையை முந்திச் சென்றது.

ஒரே தாவலில் ஆற்றைக் கடந்தது.

இப்படி அந்த மான்குட்டி எல்லாரையும் முந்திச் சென்றுவிட்டது.

அப்போது, அந்த குட்டி மான் ஒரு கல்லில் தடுக்கிக் கீழே விழுந்தது.

மான்குட்டி அழத் தொடங்கியது.

இதைப் பார்த்த குரங்கு மான்குட்டிக்கு உதவி செய்தது. அதன் காலை நீவிக் கொடுத்தது. மான்குட்டியின் கண்களில் நீர் தொடர்ந்து வழிந்தது.

அப்போது அங்கே கரடி வந்தது. அது மான்குட்டியைத் தூக்கியது.ஆனாலும் மான் தொடர்ந்து அழுதது.

அந்த மானின் தாய் அங்கே வந்தது. 'இந்தக் கல் ரொம்ப மோசம், உன்னைத் தடுக்கி விட்றுச்சு, இந்தக் கல்லை நான் அடிக்கப்போறேன்' என்றது.

மான்குட்டி சொன்னது, 'வேணாம்மா, அப்புறம் அந்தக் கல்லும் அழ ஆரம்பிச்சுடும்!'தாய் மான் சிரித்தது. கூடவே, குட்டி மானும் வலியை மறந்து சிரித்தது.