siringa please

சிரிங்க ப்ளீஸ்

காட்டிக்குள் வாழும் பாசமான ஒரு மான் குட்டியின் கதை

- neechalkaran raja

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சின்ன கண்களும், சிவந்த கன்னமும் கொண்ட ஒரு குட்டிமான் காட்டுக்குள் வாழ்ந்தது.

முயல் குட்டியிடம் வணக்கம் சொல்லி ஓடியது.

யானைக் குட்டியிடம் சாப்பிட்டாச்சா என்று கேட்டு ஓடியது.

ஒரே குதியில் அந்த ஓடையைத் தாண்டி ஓடியது

ஒரு குட்டிச் சுவரைத் தாண்டியும் ஓடியது.

புல் தரைக்குப் பக்கத்தில் பாறாங்கல் இருந்தது. அதனால் படக்கென்று தடுக்கி விழுந்தது.

தேம்பி தேம்பி குட்டி மான் அழுதது

குரங்குக்குட்டி வந்து அடிபட்ட இடத்தைத் தேய்த்துவிட்டு அழாத செல்லம் என்றது.

கரடிக் குட்டி வந்து குட்டி மானைத் தூக்கிச் சென்றது. அப்போதும் மான் அழுகையை நிறுத்தவில்லை

அம்மா மான் வந்தது. "ஏ பாறாங்கல்லே! என் பிள்ளையவா அடிச்ச! உன்னை அடிப்பேன்" என்றது.

உடனே குட்டி மான் "அடிக்க வேண்டாம் அம்மா! பாறாங்கல்லும் அழும்" என்றது. அம்மா மான் சிரித்துக் கொண்டே குட்டிக்கு முத்தம் கொடுத்தது.