சுமா தனது தாயுடன் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தாள், அவளுடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், அவளுடைய தாய் சவிதா அருகிலுள்ள சில வீடுகளில் வீட்டு வேலையாளாக இருந்தார்.
சுமா தன் அம்மாவுடன் வீடுகளுக்குச் சென்று ஒரு மூலையில் இருந்து அம்மா கடினமாக உழைப்பதைப் பார்ப்பாள்.
அவளின் அம்மா அவளிடம் எப்போதும் சொல்வாள், ‘சுமா நீ என்னை மாதிரி ஒரு வாழ்க்கை வாழக்கூடாதுங்கறதுக்கு நீ பள்ளியில் போய் கஷ்டப்பட்டு படிக்கணும்’.
இந்த வார்த்தைகளால் அம்மா என்ன கூறுகிறாள் என்று சுமாவுக்கு புரியவில்லை, ஆனால் சுமாவுக்கு அவள் அம்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று தெரியும்.
சுமா அடுத்த வருடம் பள்ளியில் சேர்ந்தாள், அவள் அடிக்கடி வெறும் காலில் சென்றாள், பல முறை அரைகுறையாக சாப்பிட்டாள், ஆனால் அவள் ஒருபோதும் குறை சொல்லவில்லை, அவள் எப்போதும் தன் தாயின் முகத்தையும், சுமாவை வளர்ப்பதில் அவள் எடுத்த கடின உழைப்பையும் பார்த்தாள்.
பள்ளியில் சுமாவுக்கு நாட்கள் கடந்தன, அவளுக்கு அதிக நண்பர்கள் இல்லை, ஏனென்றால் அவர்கள் எப்போதும் அவளை ஏழை என்று ஒதுக்கி, அவர்கள் அவளை அடிக்கடி கேலி செய்தார்கள்.
ஒரு நாள் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு தேர்வு கொடுத்தார், அவர் 'உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் 5 விஷயங்கள் யாவை?' என்ற கேள்வியைக் கேட்டார். எல்லா குழந்தைகளுக்கும் எழுதுவதற்கு நிறைய இருந்தது.
சிலர் வீடு, பொம்மைகள், உடைகள், பல்வேறு வகையான உணவுகள் போன்றவற்றைப் பற்றி எழுதினார்கள். ஆசிரியர் மாணவர்களை அவர்களின் பதில்களைப் படிக்கச் சொன்னார். வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் தங்களுக்குப் பிடித்தமான மற்றும் மிகவும் பிடித்ததை கொடுத்தனர்.
ரீனா தனது பொம்மைகள், பிடித்த உணவுகள், அவரது பொம்மைகள், அலை பேசி விளையாட்டுகள் , அவரது புதிய ஆடை ஆகியவற்றில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.
தனது பெற்றோருடன் கடைகள் , திரையரங்கம், ஐஸ்கிரீம்கள், பீட்சா மற்றும் பொம்மைகளுடன் கடைவீதிக்கு செல்லும்போது மகிழ்ச்சியாக இருப்பதாக ரவி கூறினார்.
சுமாவின் முறை இப்போது வந்தது, அவளுடைய பதில் அவளது வகுப்புத் தோழிகளின் பதில்களுடன் பொருந்தாததால் அவள் பயந்தாள். அவள் தயங்கினாள், அவர்கள் மீண்டும் அவளைப் பார்த்து சிரிப்பார்கள் என்று தெரியும்.
சுமா பகிர்ந்து கொள்ள வித்தியாசமானவைகள் இருந்தது, அது அவரது தாயின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகள் வாழ்க்கையை ஒரு சிறப்பு வழியில் பார்க்க தூண்டியது.
சுமா மிகவும் மெல்லிய குரலில் - எனக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்கள் "என்னால் பார்க்க முடியும், என்னால் கேட்க முடியும், என்னால் பேச முடியும், என்னால் நகர முடியும், என்னால் உணர முடியும், மற்றவர்களை கவனித்துக் கொள்ள முடியும்" என்று பதிலளித்தாள்.
கடினமான காலங்கள் அவளை மிகவும் சிறிய விஷயங்களைக் கூட முக்கியமாத்தாக மதிப்பிட்டன. இந்த பதிலைக் கேட்டு சக மாணவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தனர். ஆசிரியர் கைதட்ட, மொத்த வகுப்பினரும் சுமாவுக்கு கைதட்டினர்.
ஆசிரியர் வகுப்பில் , நம் வாழ்வில் நாம் பெற்றுள்ளதை நாம் மதிக்க வேண்டும் மற்றும் அனைத்து ஆசீர்வாதங்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூறினார்.
அப்போதிருந்து, அவளுடைய வகுப்பு தோழர்கள் அனைவரும் அவளுடைய நண்பர்களாகி, பள்ளி நடவடிக்கைகளில் அவளை எப்போதும் ஆதரித்தனர்.
கதையின் நீதி : கடவுளிடமிருந்து வரும் பரிசுகளுக்கு மதிப்பு கொடுங்கள் மற்றும் அவற்றை எப்போதும் பொக்கிஷமாக வைத்திருங்கள்.