"அனு" என் அக்கா ...
என் வீட்டுப்பாடங்கள் செய்ய உதவுவாள்.
சில நாள் "எனக்கு" வீட்டுப்பாடம் செய்ய விருப்பம் இருக்காது.
ஆனால் "அனு" என்னை உட்கார்ந்து செய்திட வைப்பாள்
அனுவிடம் பெரிய மிதிவண்டி உண்டு.
அவள் எனக்கு அதை ஓட்டக் கற்றுத்தந்தாள்.
நான் தவறி விழுந்தால் ஓடி வந்து உதவி செய்வாள்
அனு என்னிடம் சண்டை போடுவாள்.
நான் கோபம் கொள்வேன் .
பின் வருத்தம் கொண்டு அவளே வருவாள்.
அதனால் எனக்கு என் அக்கா அனு என்றால் ரொம்பவே விருப்பம்.