sumathi

சுமதி

தனியாக இருந்த சுமதி என்ன செய்தாள்? இந்த கதையைப் படிக்கலாம் வாருங்கள்!

- Sudha Y

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுமதி உடன்   விளையாட இன்று நண்பர்கள் யாரும் இல்லை. அவள் தனியாக என்ன செய்வாள்?

சுமதிக்கு ஒரு யோசனை தோன்றியது. அவள் தன் தாயின் சேலையை அணிந்தாள். பின்பு தன் அக்காவின் செருப்புகளை அணிந்தாள்.

இப்போது சுமதி ஓர் ஆசிரியை. அவள் வேறு என்ன அணிய முடியும்?

சுமதி உள்ளே சென்று தன் தாத்தாவின் கண்ணாடியை பார்த்தாள்.

அவள் கண்ணாடியை எடுக்கும் பொழுது தாத்தாவின் கைத்தடி கீழே விழுந்தது.

சத்தம் கேட்டு தாத்தா எழுந்தார். அவர் கோபப்படுவாரா?

தாத்தா கோபப்படவில்லை. அவர் சுமதியை அன்போடு அணைத்தார்.