சுந்தரியைப் பார்த்தீங்களா?
சுந்தரி பச்சையாக இருப்பாள். அவளுக்கு ஒளிந்துகொள்வதென்றால் பிடிக்கும்.
அல்லிப் பூக்களுக்கு அடியில் ஒளிந்திருக்கிறாளா?
இல்லை, துரந்தா பூக்களுக்கு நடுவில் இருக்கிறாளா?
மீன்பிடிப் பூனையோடு ஒளிந்திருக்கிறாளா?
இல்லை, கழிநண்டுகளோடு இருக்கிறாளா?
சதுப்பு நிலத்தில் ஒளிந்திருக்கிறாளா?
இல்லை, உப்புத் தண்ணீருக்குள் இருக்கிறாளா?
தூக்கணாங்குருவிக் கூட்டில் ஒளிந்திருக்கிறாளா?
“இதோ, சுந்தரி! கண்டுபிடித்துவிட்டேன்!”
“ஓ! எங்கே போய்விட்டாய்? உன்னைக் காணாமல் தவித்துப் போய்விட்டேன்!”