sur sur

சுர் சுர்

அன்று பிரபல கால்பந்து கோப்பை போட்டி நடக்கும் நாள், ஆனால் திவ்யாவிற்கோ ஜலதோஷம்! அவளால் விளையாட முடியுமா? திவ்யாவிற்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படியுங்கள். மேலும் ஜலதோஷம் வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.

- Karthigeyan Sivaraj

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுர் சுர்.

அடடா!

திவ்யாவிற்கு ஜலதோஷம்.

திவ்யாவிற்கு இன்று ஜலதோஷம் இருக்கவே கூடாதே!

அவள் விளையாட வேண்டிய நாள் இது. இன்றுதான் பிரபல கால்பந்துக் கோப்பையின் இறுதிப் போட்டி!

சுர் சுர்.

அவர்கள் வென்றுவிட்டார்கள்!

அவர்கள் பிரபலக் கால்பந்துப் போட்டிக் கோப்பையை வென்றுவிட்டார்கள்!

சுர் சுர்.

சபாஷ், ருஸ்தம்!

சுர் சுர்.

நல்ல ஆட்டம், குர்மீத்!

சுர் சுர்.

அருமையாக இருந்தது, மோஹித்!

சுர் சுர்.

நன்றாக விளையாடினாய் பூஜா!

சுர் சுர்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

அ-அ-அ-அச்ச்ச்ச்சூ!

சுர் சுர்.

திவ்யாவின் ஜலதோஷம் சரியாகும் வரை அவளால் இனி கால்பந்து ஆட முடியாது.

அனைத்து நண்பர்களையும் விட்டுப் பிரிந்திருப்பதில் அவளுக்கு வருத்தம்.

ஒரு வாரம் கழித்து...

சுர் சுர் நின்றுவிட்டது!

திவ்யா தன்னுடைய நண்பர்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறாள்!

சுர் சுர்.

அடடா! இது என்ன?ருஸ்தமிற்கு ஜலதோஷம் போல தெரி்கிறதே...

சுர் சுர்.

குர்மீத்திற்கும்...

சுர் சுர்.

மோஹித்திற்கும்...

சுர் சுர்.

...பூஜாவிற்கும் கூட!

அடடா!

அனைவருக்கும் ஜலதோஷம் பிடித்துவிட்டது!

சுர் சுர்.

ஜலதோஷம் வைரஸ்கள் எனப்படும் சிறிய துகள்களால் ஏற்படுகிறது. அவற்றால் நாம் சுவாசிக்கும் காற்றில் மிதக்க முடியும், நாம் தொடும் பொருட்களில் படிந்திருக்க முடியும். இந்த வைரஸ்கள் உங்கள் மூக்கு மற்றும் தொண்டைக்குள் நுழைந்துவிட்டால், உங்களுக்கு தொண்டைப் புண், அல்லது தலைவலி, அல்லது மூக்கடைப்பு ஏற்படலாம், அல்லது மூன்றும் சேர்ந்து ஒரே நேரத்திலும் ஏற்படலாம்!

ஜலதோஷம் உங்களிடம் இருந்து உங்கள் நண்பர்களுக்கு வேகமாகப் பரவுகிறது. உங்களுக்கு ஜலதோஷம் இருக்கும்போது நீங்கள் உங்கள் நண்பர்களைத் தொட்டாலோ அல்லது அவர்கள் அருகில் தும்மினாலோ இருமினாலோ, அவர்களும் நோய்வாய்ப்படுவார்கள். நீங்கள் இருமினாலோ தும்மினாலோ, உங்கள் மூக்கு மற்றும் தொண்டை வைரஸ்கள், காற்றில் 12 அடி வரை செல்ல முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஐயோ!

ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க பின்வருவனவற்றை நீங்கள் செய்யவேண்டும்:

கடுமையான ஜலதோஷம் பிடித்தவர்களிடமிருந்து விலகியே இருங்கள். ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தாலோ, அவர்களோடு கைகுலுக்கினாலோ உங்கள் கைகளை உடனே சுத்தம் செய்யுங்கள். இல்லையென்றால் வைரஸ் உங்கள் கைகளில் இருந்து உங்கள் மூக்கை அடைந்துவிடும்.

ஜலதோஷம் பாதிக்கப்பட்டவர்களுடைய குடிநீர்க் கோப்பையையோ, சாப்பிடும் பாத்திரங்களையோ, உடைகளையோ பகிர்ந்துகொள்ளாதீர்கள்

அதிகமாக காய்கறிகளையும் பழங்களையும் உண்ணுங்கள், தண்ணீரை அதிகம் குடியுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.