பார் ! பார் ! பம்பரம் பார் !
பம்பரம் சுற்றும் வேகம் பார் !
ஒற்றைக் காலில் ஒயிலாக
சுழன்றே ஆடும் பம்பரம் பார் !
சாட்டை கொண்டே சுழற்றி விட
எழிலாய் அசையும் பம்பரமே !
இதற்கு இணையாய் மகிழ்வு தர
எதுவும் உண்டோ சொல்வீரே !