swarnapatchi

சுவர்ணபட்சி

தனக்கு பேரண்டத்தை ஆளும் சக்தியைத்தரும் ஒரு தங்கப் பறவையைத் தேடி ஒரு மன்னன் பயணிக்கிறான். இளவரசியோ அந்த பறவைக்கு விடுதலை தர விரும்புகிறாள்.

- Praveena Ramarathinam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுவர்ணத்வீபத்தின் மகாராஜா ராஜபகதூர்,

தனது  அரியாசனத்தில் மீசையை

முறுக்கிய படி  அமர்ந்திருந்தார்.

அவரது அரசவை,

அதிகாரிகள் மற்றும்

அமைச்சர்களால் நிறைந்திருந்தது.

அரசவை சோதிடர், முக்கியமான ஒரு

கணிப்பை செய்ய வேண்டி

,

ஆழமான சிந்தனையில்  இருந்தார்.

.

சுவர்ணத்வீபத்தின் மகாராஜா ராஜபகதூர்,

தனது  அரியாசனத்தில் மீசையை

முறுக்கிய படி  அமர்ந்திருந்தார்.

அவரது அரசவை,

அதிகாரிகள் மற்றும்

அமைச்சர்களால் நிறைந்திருந்தது.

அரசவை சோதிடர், முக்கியமான ஒரு

கணிப்பை செய்ய வேண்டி

,

ஆழமான சிந்தனையில்  இருந்தார்.

.

அரசர் முழங்கினார்,"அரசவை சோதிடரே, இந்த பேரண்டத்தின் பேரரசனாக நான் என்ன செய்ய வேண்டும்”?

"அரசே! இந்த முழு பேரண்டத்தின் அரசராக உங்களுக்கு நூறு சதவீதம் வாய்ப்பு இருப்பதாக நட்சத்திரங்கள் சொல்கின்றன" என்றார் சோதிடர்.

"சபாஷ்,சபாஷ்!" என்று அவையில் இருந்த அனைவரும் கைதட்டினர். சோதிடர் ஏதோ பேச முயன்று அமைதியானார். இதனை கவனித்த அரசர்,"உங்கள் மனதில் உள்ளதைச் சொல்லுங்கள். பயப்படாதீர்கள்!" என்றார்.

சோதிடர் கூறினார்,"அரசே! நமது ராஜாங்கத்தில்

சோதிடர் கூறினார்,"அரசே! நமது ராஜாங்கத்தில்

ஒரு அதிசயமான சுவர்ணபட்சி வசிக்கிறது.

ஒரு அதிசயமான சுவர்ணபட்சி வசிக்கிறது.

அதனைப் பிடித்துவிட்டால், நீங்கள்தான்

அதனைப் பிடித்துவிட்டால், நீங்கள்தான்

முழு பிரபஞ்சத்திற்கும் ராஜா.

முழு பிரபஞ்சத்திற்கும் ராஜா.

அதை யாராலும் தடுக்க முடியாது”

அதை யாராலும் தடுக்க முடியாது”

"சுவர்ணபட்சியை உடனே பிடித்ததாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்யுங்கள்" என்று ராஜா ஆணையிட்டார்.

அரசு அறிவிப்பாளர், "சுவர்ணபட்சியை பிடித்து வருபவருக்கு மகாராஜா இராஜபகதூர் தக்க சன்மானம் வழங்குவார்" என்று பொது சுற்றறிக்கையை வெளியிட்டார்.

"சுவர்ணத்வீபத்தின் குடிமக்கள், குன்றுகள்,மலைகள்,காடுகள் எல்லாம் சுற்றி அந்தப் பறவையைத் தேடினார்கள். இறுதியாக, அரசவை சோதிடர் அந்த தங்கப் பறவை நீலகிரிமலைச் சிகரத்தில் வாழ்வதாகக் கணித்தார். அரசன் உடனடியாக தனது படையுடன் நீலகிரிக்கு விரைந்தார்.

அதேநேரம், இளவரசி மாளிகையின் மேல்தளத்தில் இருந்து, படையின் அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த தொடுவானத்தை உற்று நோக்கியபோது,                                           அவளது கண் ஓரத்தில் மெல்லிய அசைவை                                         உணர்ந்தாள்.

அங்கே  சுவர்ணபட்சி இருந்தது.

அந்தப் பறவை மாளிகையின் மேல் தளத்தில் கட்டப் பட்டிருந்த ஒரு கூம்பின் மேல் அமர்ந்து இருந்தது.

"இளவரசி, நான் பிடிபடவே இங்கு வந்தேன். என்னை உந்தந்தையிடம் அழைத்துச் செல்" என்று பறவை அவளிடம் சொன்னது.

"இளவரசி, நான் பிடிபடவே இங்கு வந்தேன். என்னை உந்தந்தையிடம் அழைத்துச் செல்" என்று பறவை அவளிடம் சொன்னது.

"நீ ஏன் பிடிபட வேண்டும்? நீ கிடைத்தால் அவர் உன்னைக் கொன்று விடுவார் என்று உனக்குத் தெரியாதா?”

"நீ ஏன் பிடிபட வேண்டும்? நீ கிடைத்தால் அவர் உன்னைக் கொன்று விடுவார் என்று உனக்குத் தெரியாதா?”

" எனக்காக பிறர் இறப்பதை விட, நான் இறப்பதே மேல்" என்று பறவை வருந்தியது.

என்னைத் தேடி, பலர் தம் வாழ்வைத் தொலைத்து விட்டார்கள். அவர்களுக்கு உதவவே நான் விரும்புகிறேன்.

என்னைத் தேடி, பலர் தம் வாழ்வைத் தொலைத்து விட்டார்கள். அவர்களுக்கு உதவவே நான் விரும்புகிறேன்.

" என் அன்புப் பறவையே, நீ இந்தக் கூம்பிலேயே தங்கி விடு. நீ இங்கு இருப்பது யாருக்கும் தெரியாது. நீ விரும்பும் போது போகலாம். யாருக்கும் உதவலாம். ஆனால் இங்கே திரும்பி வந்து விடு. நீ பத்திரமாய் இருப்பாய்." என்றாள் இளவரசி.

" என் அன்புப் பறவையே, நீ இந்தக் கூம்பிலேயே தங்கி விடு. நீ இங்கு இருப்பது யாருக்கும் தெரியாது. நீ விரும்பும் போது போகலாம். யாருக்கும் உதவலாம். ஆனால் இங்கே திரும்பி வந்து விடு. நீ பத்திரமாய் இருப்பாய்." என்றாள் இளவரசி.

உனக்குப் பசிக்க வில்லையா? நான் உணவு கொண்டு வரட்டுமா?"  என்று கேட்டாள் இளவரசி.

"வேண்டாம் இளவரசி.                  நான்   மழை  நீரைக்                    குடித்தும்,   நிலவின்                     ஒளியை   உண்டும்,                     காலைப் பனியை                   அருந்தியும் வாழ்வேன்.                       எனக்கு உணவு                தேவையில்லை."

வானில் மின்னிக்கொண்டிருந்தன.

தங்கப் பறவை கூம்பில்

அமர்ந்தபடி இரவு வானத்தைப்

பார்த்தது. அப்போது ஒரு சிறுவன்

அழும் மெல்லிய ஒலி தூரத்தில் இருந்து

கேட்டது. கூம்பில் இருந்து சிறுவனைத் தேடிப்

பறவை பறந்தது.

சிறுவர்கள்,தங்களுக்குத் தேவையான எல்லா புத்தகங்களோடும், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். புத்தாடைகளில் சிரித்து மகிழ்ந்தார்கள். அஞ்சல் அட்டைகளில் இருப்பதைப் போல, தெருக்களின் காட்சி மாறியிருந்து.

சேரிகள் எல்லாம்,                  வரிசையாய்க் கட்டப்பட்ட -  ஒளி வீசும் விளக்கேற்றப் பட்ட-செங்கல் வீடுகளாக மாறி யிருந்தன

.

சிறுவர்கள் கதைப்புத்தகங்களைப்                         படித்தார்கள்.

மூதாட்டிகள் வர்ணங்களால் சுவர்களை அலங்கரித்தார்கள்.

இளையோர் தெருக்களில் பாடித்                        திரிந்தார்கள்.

அடுத்தநாள், சோககீதம் கேட்டு இளவரசி, மாளிகையில் கூம்பு இருந்த இடத்திற்கு ஏரி வந்தாள்.

தங்கப் பறவை வயலின் வாசித்துக் கொண்டு இருந்தது. அருகில் வந்த இளவரசி அதிர்ந்தாள்.

சுவர்ணபட்சி தனது பாதி சிறகுகளை இழந்திருந்தது.

ஓ! தங்கப் பறவையே! உன்னை நீயே ஏன் இப்படி வருத்திக் கொள்கிறாய்?

"இளவரசி,மக்களுக்கு உதவி செய்யவே நான் விரும்புகிறேன் என்று உன்னிடம் சொல்லவில்லையா?

இளவரசி அந்த பறவையின் கண்களைப் பார்த்து புன்னகைத்தாள். சுவர்ணத்வீபத்தின் ராஜாங்கத்தை கூம்பில் இருந்த சன்னல் வழியே பார்த்தாள்.

எங்கெங்கும் மக்களிடம் புதுப்பிக்கப் பட்ட அன்பின் பிணைப்பினைக் கண்டாள்.

இளவரசி பேசினாள்,"என் தங்கப் பறவையே! நீ உண்மையிலேயே சுவர்ணத்வீபத்தின் மக்களுக்கு உதவியிருக்கிறாய்!"

பறவை வருந்தி உரைத்தது, "இல்லை, இளவரசி. ஏழ்மையும் மனச்சோர்வும் கொண்ட மக்கள் இன்னும் நிறைய இருக்கிறார்கள்."

"இளவரசி,நான் இறப்பதற்கு முன் எனக்கு ஒரு உதவி செய்வாயா?"

இளவரசி கதறினாள்,"இல்லை இல்லை!உனக்கு ஒன்றும் ஆகாது. நீ களைத்திருக்கிறாய். இளைப்பாறு, நான் உன்னை நாளை சந்திக்கிறேன்"

"இளவரசி, எனக்கு.உண்மையிலேயே என்ன தேவை என்பதை இன்னும் உன்னிடம் சொல்லவில்லை" என்றது பறவை.

இளவரசி, தங்கப் பறவையின் இறப்பை நினைத்து மிகவும் கலங்கிப் போயிருந்தாள். "நீ சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நாளை கேட்கிறேன். இப்போது இளைப்பாறு, தங்கப்பறவையே! ரொம்ப நேரமாகி விட்டது. நாளை சந்திப்போம்"

அதேநேரம், தோல்வியை அறிவித்து ராஜா நீலகிரியில் இருந்து நாடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

தனது நகரத்திற்குள் நுழைந்ததும் அதிர்ந்து போனார். எங்கே சேரிகள் இருந்ததோ, அங்கே இப்போது அழகிய வீடுகள், அகண்டதெருக்கள், மகிழ்வான மக்கள்.

"என் நாட்டில் இந்த மாற்றங்களை யார் செய்தார்?” என்று மன்னர் அதிசயித்தார்.

மகாராஜா ராஜபகதூர்,               நகரத்தில் ஒரு பெரிய                சந்திப்புக்கு ஏற்பாடு                       செய்திருந்தார்.                         ஆயிரக்கணக்கான             சுவர்ணத்வீபத்தின் மக்கள்                வந்திருந்தார்கள்.

" என் அருமை மக்களே! சுவர்ணபட்சியை யாராவது பார்த்தீர்களா?" என்று கேட்டார் மன்னர்.

மக்கள் அனைவரும் ஒரே குரலில், "இல்லை,மகாராஜா" என்றார்கள்.

கூட்டத்தில் இருந்த ஒருவர்," அரசே! நாங்கள் சுவர்ணபட்சியை பார்க்கவில்லை. ஆனால் அதன் பரிசை நாங்கள் பெற்றோம். பறவை சிதறிச்சென்ற தங்கச் சிறகுகள் எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் தந்துள்ளன." என்றார்

மன்னன் கோபத்தில் கத்தினார், "என்ன தைரியம் உங்களுக்கு?

நீங்கள் இந்த நாட்டின் குடிமக்கள். அதனால், பறவையிடம் இருந்து நீங்கள் பெற்றவை                                                     மன்னனின் கருவூலமாக கருதப் பட வேண்டும்."

பின்னர் அரவையில் ராஜா ஆணையிட்டார், "சோதிடரே, அந்தப் பறவை தன்னை எங்கே மறைத்துக் கொண்டு இருக்கிறது என்று சொல்லுங்கள்"

அரசவை சோதிடர் பறவையைப் பற்றி கணிக்க முயன்றதும், இளவரசியின் பணிப்பெண் ஓடிச் சென்று இளவரசியி்டம் எல்லாவற்றையும் விரைந்து சொன்னாள்.

இளவரசி கூம்பிற்கு சென்று பறவையை எச்சரிக்க விரைந்தாள்.

கைது செய்யும் முன் விரைந்து செயல்பட

வேண்டும்."

சுவர்ண பட்சி அவள் காதில் ஏதோ

ரகசியமாக சொன்னது.

அவள் கண்களில்

நீர் நிறைந்தது.

என்னால்   மந்திரத்தை சொல்ல முடியும். ஆனால் உன் அழகான சிறகுகளை என்னால் பிடுங்க முடியாது.

சோதிடர்,

தன் கணிப்பை             முடித்திருந்தார்.              வெற்றியில் அவர்

"அரசே! நீங்கள் பறவையைப் பிடித்து விட்டீர்கள்! என்ன வியப்பு! அந்த பறவை அரண்மனையில்தான் எங்கோ ஒளிந்திருக்கிறது."

அரசர் கட்டளையிட்டார், இப்போதே அந்த பறவையை கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள்”

இளவரசியும் பறவையும் மேல்தளத்தில் இருந்தார்கள். பறவையைத் தேடும் வீரர்களின் ஒலியைக் கேட்க முடிந்தது. ஆண்களுக்கு

அனுமதி இல்லாத அந்தப் புறத்தில் கூட

தேடினார்கள்.

பறவை அமைதியிழந்தது. "இளவரசி,இனியும் தாமதிக்காதே! இளவரசி விரைந்து சிறகுகளை பறித்தாள். அவள் கண்களில் இருந்து அமைதியாய்க் கண்ணீர் வழிந்தது. தங்கப் பறவை வலியால் கண்களை மூடிக் கொண்டது.

படிகளில் மன்னனும் வீரர்களும் விரைந்து வரும் சத்தம் கேட்டது. பறவை படபடத்தது. "இளவரசி, வேகமாக!" அவள் பறவையின் கடைசி இறகு வரை பறித்து தன் சால்வையில் சேகரித்தாள். பின்னர் மேல்தளத்தில் மையத்தில் நின்று பறவை சொன்ன மந்திரத்தை உச்சரித்தாள்.

அவள் மந்திரம் சொல்லச்சொல்ல,

தங்க இறகுகள் உயர எழுந்து

வானில் சென்று மறைந்தன.

அடுத்த நொடி, மன்னனும்

வீரர்களும் அங்கு வந்து

சேர்ந்தார்கள்.

ஒரு அன்புள்ளம் கொண்ட தங்கப்பறவையின் மரணத்திற்கு, தன் தந்தை காரணமானதை எண்ணி மனம் உடைந்தாள் இளவரசி. அவள் அரசரிடம் கேட்டாள்,

மன்னர் உறைந்து போனார்.அப்படியே  தரையில் அமர்ந்து கீழே சரிந்தார்.  இளவரசி

மன்னர் உறைந்து போனார்.அப்படியே

தரையில் அமர்ந்து கீழே சரிந்தார்.

இளவரசி

அவர் அருகில் அமர்ந்தாள். அவர் தன்

அவர் அருகில் அமர்ந்தாள்.

கண்களில் கண்ணீரோடு  அவளைப்  பிடித்துக் கொண்டார்.  "இல்லை, மகளே!"  அவர் அமைதியாகக் கூறினார்.           "நீதான் என் மனதின் பொக்கிஷம். இந்த முழு பிரபஞ்சத்தின் பேரரசனாக இருப்பதை  விட உன் அன்பைப் பெறவே நான் விரும்புகிறேன்."

பிடித்துக் கொண்டார்.  "இல்லை, மகளே!"

அவர் அமைதியாகக் கூறினார்.

"நீதான் என் மனதின் பொக்கிஷம்.

இந்த முழு பிரபஞ்சத்தின் பேரரசனாக இருப்பதை

விட உன் அன்பைப் பெறவே நான் விரும்புகிறேன்."

வீரர்கள் கூரையின் மேல் ஒரு தங்கப்பந்து இருப்பதையும்,

அருகில் ஒரு தங்க இறகு இருப்பதையும் கண்டார்கள்

இளவரசி அந்த இறகால், தங்கப் பந்தினைத் தொட்டாள்.

எல்லோரும் வியக்கும்படி அந்த பந்து ஒளிர்ந்து, தங்கப் பறவையாக மாறியது.

அந்த சுவர்ணபட்சி சிறகடித்து வானில் பறந்து சூரியனுடன் ஒன்றாகக் கலந்தது.