thatha pol toto

தாத்தா போல் டோடோ

தாத்தாவிடம் டோடோ என்ன கற்றுக்கொள்கிறாள் ?

- Sridevi G

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தாத்தா மூலிகைகளை நட்டார்.

டோடோவும் மூலிகைகளை நட கற்றுக்கொண்டாள்.

தாத்தா தக்காளி நட்டார்.

டோடோவும் தக்காளி நட கற்றுக்கொண்டாள்.

தாத்தா பீர்க்கங்காய் நட்டார்.

டோடோவும் பீர்க்கங்காய் நட கற்றுக்கொண்டாள்.

தாத்தா உருளைக்கிழங்கு நட்டார்.

டோடோவும்உருளைக்கிழங்கு நட கற்றுக்கொண்டாள்.

தாத்தா சோளம் நட்டார்.

டோடோவும் சோளம் நட கற்றுக்கொண்டாள்.

டோடோவிற்கு அவள் தாத்தா போல செடிகளை எப்படி நட வேண்டும் என்று தெரியும்.

டோடோ சந்தோஷமாக இருந்தாள். தாத்தாவும் சந்தோஷமானார்.

டோடோ சந்தோஷமாக இருந்தாள். தாத்தாவும் சந்தோஷமானார்.