ஹஹா ஹஹா ஹஹா ஹ ஹா
4 பி வகுப்பிலிருந்து வந்த ஒரு பயங்கர சப்தம் வகுப்பறை முழுவதும் எதிரொலித்தது.
அந்த சத்தம் எங்கிருந்து வந்தது என கணித ஆசிரியரான குண்டப்பன் சாருக்குத் தெரியும்.
"த.சுந்தர் தயவு செய்து வகுப்பை விட்டு வெளியேறு" என்று அவர் சொன்னார்.
வகுப்பே அமைதியானது. அனைவரது கண்களும் ஐந்தாவது பெஞ்சில் அமர்ந்திருந்த த.சுந்தர் மேல் பாய்ந்தது.
" நான் என் சிரிப்பைக் கட்டுப்படுத்த முயற்சித்தேன், ஆனால் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
4 பி வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் கொல் என சிரிக்கிறார்கள்.
சுந்தரி நிறைய சிரித்தாள்.
அவள் கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் சிரித்தாள்.
உதாரணமாக, கடந்த வாரம் அவள் வகுப்பு தோழர் டி.சுந்தரியிடம் இந்த நகைச்சுவையை கூறினார்:
கே: கணித ஐயா ஏன் எப்போதும் சோகமாக இருக்கிறார்?
ப: ஏனென்றால் அவர் எப்பொழுதும் பிரச்சினைகளை (கணக்குகளை) தீர்க்க வேண்டும்.
குண்டப்பன் ஐயாவைப் பார்த்த எல்லோரும் சிரித்ததில் ஆச்சரியமில்லை.
ஒவ்வொரு நகைச்சுவையும் டி.சுந்தரியிடமிருந்து வித்தியாசமான எதிர்வினையைத் தூண்டியது.
சில நேரங்களில் குபீர் என சிரிப்பாள்
சில நேரங்களில் குளுக் என சிரிப்பாள்.
சில நேரங்களில் ஹஹா ஹஹா என சிரிப்பாள்
சில நேரங்களில் முஹாஹாஹாஹா என சிரிப்பாள்
ம்ம்ம்ம்ம்ம்ம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹஹா ஹஹா ஹஹா ஹஹா ஹஹா
சில நேரங்களில், டி.சுந்தரி தனது சிரிப்பை அடக்க மிகவும் கடினமாக முயன்றாலும் முடியாமல் வெடித்துச் சிரிப்பாள்.
டி.சுந்தரி தனக்குள் பொங்கி வழியும் சிரிப்பை அடக்க முடியாமல் இருப்பதை நினைத்து கவலைப்பட்டாள்.
சிரிக்காமலிருக்க வாயில் கைகுட்டையினை திணித்து வைத்தாலும் சிரிக்கும் போது அவள் வாயிலிருந்து வெளியே வந்து விழுந்தது
டி. சுந்தரி அவளுக்கு வேடிக்கையான விஷயங்களின் பட்டியலை உருவாக்கினாள்.
கிச்சுகிச்சு மூட்டுதல்
போண்டா
வாழைப் பழத்தோலில் வழுக்கி விழும் மக்கள்.
கழிப்பறை ஜோக்
குசு
“இது போன்ற நிகழ்வுகளுக்கு நான் ஒருபோதும் சிரிக்க மாட்டேன்"
என டி. சுந்தரி முடிவு செய்தாள்.
அடுத்த நாள், நூலகத்தில்
பி.மணிகந்தன் ஒரு புத்தக அலமாரியின் பின்னால் நகர்ந்து ஒரு விதமான சத்தமிட்டான்.
அதனைக் கேட்டதும் உடனடியாக டி.சுந்தரியும் வித்தியாசமான ஒலியுடன் சிரித்தாள்.
சிரிக்கக்கூடாது என்ற திட்டம் தோற்றுப்போனதை உணர்ந்தாள்.
அடுத்த திட்டத்தை செயல்படுத்த யோசித்தாள்.
பூட் பூட் பொட்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஸ்கண்டு அண்ணா, டி. சுந்தரியின் மூத்த சகோதரர்
மற்றும் ஒரு விஞ்ஞானி, அவரிடம் தன் பிரச்சனையை கூறி தன்னுடைய சிரிப்பை அடக்கும் ஒரு கருவியை கண்டுபிடித்துத் தருமாறு கேட்டாள்.
டி.சுந்தரியின் பிரச்சனையை கேட்டு எப்பொழுதும் சீரியசாக இருக்கும் ஸ்கண்டு அண்ணா வெடித்து சிரித்தார்.
டி.சுந்தரி தனக்கு வரும் சிரிப்புப் பிரச்சனை
ஒரு குடும்ப பிரச்சினையோ என நினைத்தாள்.
அப்படி இல்லை என்பதை ஸ்கண்டு அண்ணா விளக்கினார்.
"வேடிக்கையான நிகழ்வுகளை காணும் போது மனிதர்கள் சிரிப்பார்கள். அது தான் உனக்கும் நடக்கிறது. சிலருக்கு மற்றவர்களை விட அதிகமாக சிரிப்பு வருகிறது" என்றார்.
“உண்மையாகவா ?” என்று டி.சுந்தரிஆச்சரியப்பட்டாள்.
"உண்மையில் சிரிப்பது உடல் நலத்திற்கு நல்லது" என்றார் ஸ்கண்டு அண்ணா.
"சிரிக்கும் போது ஒருவிதமான ரசாயனம் உடலுக்குள் உருவாகிறது. அது மகிழ்ச்சியை தருகிறது.
"ஆதிகால மனிதர்கள் கூட சிரித்தார்கள் என்பது உனக்குத் தெரியுமா?" என அண்ணா அவளிடம் கேட்டார்.
பெரிய தாடியை உடைய ஒரு ஆதி மனிதன் தன்னுடைய வரைபட நோட்டில் சிரித்துக்கொண்டு இருப்பது போல டி.சுந்தரி கற்பனை செய்தாள்.
“ஆதி மனிதர்கள் மொழி வழியாக பேச ஆரம்பிப்பதற்கு முன் சிரித்து பேச தொடங்கியிருந்தனர். சிரிப்பதன் மூலம் எல்லாம் சரியாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வார்கள்" என்றார் அண்ணா.
"நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கு இன்று நாம் சிரிக்கிறோம். மற்ற விலங்க்குகளால் சிரிக்க முடியாது.
சிம்பன்சிகள், போனொபோஸ், எலிகள், டால்பின்கள் மற்றும் நாய்களைப் கூட சிரிக்க இயலாது" என்று அண்ணா அவளிடம் விளக்கிக் கூறினார்.
"டி. சுந்தரி, நீ இன்று சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தது தெரியுமா?" என அண்ணா கேட்டாள்.
“எப்படி, அண்ணா? நாம் முழு நேரமும் பேசிக்கொண்டல்லவா இருந்தோம்? ”
“நாம் புன்னகைக்கும்போதெல்லாம்,நம்முடைய முகத்தின் தசைகள் வேலை செய்யும். எனவே ஒவ்வொரு முறையும் நாம் சிரிக்கும்போதும் நம் முகத்திற்கான முழுமையான பயிற்சியை செய்கிறோம் என்று அர்த்தம்.”என்று அண்ணா அவளிடம் விளக்கி கூறினார்.
அண்ணா சிரித்தபடி, “ நீங்கள் சிரிக்கும்போதெல்லாம், உங்கள் முகத்தில் உள்ள ஜிகோமாடிகஸ் பெரிய மற்றும் சிறிய தசைகள் புன்னகையை மேல்நோக்கி மற்றும் வெளிப்புறமாக இழுக்க உதவுகின்றன. ” என்றார்.
“ஆனால் சிரிக்கும் போது ஒலி எப்படி உருவாகிறது? அது எப்படி மற்றவர்களையும் சிரிக்க வைக்கிறது, ”என்று டி.சுந்தரி கேட்டாள்.
“நாம் சுவாசிக்கும்போது, காற்று நம்முடைய குரல் நாண்கள் வழியாக நுரையீரலுக்குள் செல்கிறது. ஆனால் நாம் சிரிக்கும்போது, காற்று தடுத்து நிறுத்தப்படுகிறது, இது தான் ‘ஹ-ஹ-ஹா’ ஒலிகளுக்கு வழிவகுக்கிறது, நீங்கள் நிறுத்த முடியாது என்று தோன்றுகிறது, ” என அண்ணா விளக்கினார்.
“அப்படியானால், டி.சுந்தரி, சிரிப்பு முற்றிலும் இயற்கையானது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?"
"நாம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தாதவரை, சிரிப்பதில் தவறில்லை."
இப்பொழுது டி.சுந்தரி மிகவும் நன்றாக உணர்ந்தார்.
“இது கிட்டத்தட்ட தேநீர் நேரம்.
நாம் ஒரு போண்டா சாப்பிடுவோமா? ”
அடுத்து என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்த ஸ்கண்டு அண்ணா கூறினார்.
போண்டா அவள் வயிற்றில் போன பிறகும் டி.சுந்தரியால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை.
கட்டோட்காச்சா - மு ஹ ஹா ஹ ஹா ஹா
வெடிகுண்டு சிரிப்பு - ம்ஹாப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அஹா அஹா
வாடனப்பள்ளி சூனியக்காரி சிரிப்பு - ஈ ஈ ஹீ ஹீ ஹீ
கிகில் - கெஹெஹேஹே
கர்ஜல் -குலுகுளு குளு குளூ ஹ ஹாஹ் ஹா
போலி சிரிப்பு - டீஹீஹீ ஹிஹீ