நதியின் கீழ், நீர் பதுமராகம் என்னும் மலர்கள் நிறைய உள்ளன.
நீர் பதுமராக மலர்கள் ஊதா நிறத்தில் உள்ளன.
அவை, அப்பாவின் படகில் எப்போதும் மாட்டிக்கொள்ளும்.
நீர் பதுமராக மலர்களின் இலைகளால் தங்கையுடன் வீடு கட்டலாம்.
நீர் பதுமராக மலர்களை அம்மா சமைக்கும்போது, மிக ருசியாக இருக்கும் !
அக்காவுக்கு, நீர் பதுமராக மலர்களுடன் இறால்களும் பிடிக்கும்.
நீர் பதுமராக மலர்களின் இலைகளையும் தண்டுகளையும் அம்மா வெட்டுகிறார். ஏன் ?
அவைகளை காய வைக்க !
காய்ந்த நீர் பதுமராக மலர் தண்டுகளை அம்மா சேர்க்கிறார்.
ஏன் ?
புதிய காலணிகள் செய்வதற்காக !
நீர் பதுமராக மலர் தண்டுகளால் மேலும் பல கைவண்ணங்களை செய்யலாம் !
நீர் பதுமராக மலர்களால் நான் ஒரு வீடு கட்டப்போகிறேன் !