அத்வைத், சித்தார்த், நிலா ஆகியோர் வெளியில் விளையாடப் போனார்கள்.
அவர்கள் ஒரு பூனையைப் பார்த்தார்கள்.
அந்தப் பூனை ஒரு பெரிய எலியைப் பார்த்தது.
"அங்கே பார்!" சித்தார்த் சத்தமாகச் சொன்னான்.
ஒரு சின்ன எறும்பு எலியை நோக்கி வந்தது.
நிலா அதைப் பார்த்தாள்.
திடீரென்று, ஒரு பெரிய நிழல் அவர்கள் மேல் படர்ந்தது.
ஒரு பெரிய கழுகு சுவர் மீது வந்து நின்றது.
ஒரே தெருவில் ஒரு மிகச்சிறிய எறும்பும், ஒரு சின்ன பூனையும், ஒரு பெரிய எலியும், ஒரு மிகப்பெரிய கழுகும் இருந்தன.
அந்த புத்திசாலி பிள்ளைகள் என்ன செய்வார்கள்?
அவர்கள் கையைத் தட்டினார்கள்.
அந்த கழுகு அதன் பெரிய இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று மரத்தில் உட்கார்ந்தது.
நிலா அந்த எறும்பை ஓர் இலையில் ஏற வைத்தாள். பிறகு அந்த இலையை சுவரின் மீது வைத்தாள்.
எறும்பு ஒரு சக்கரையைப் பார்த்தது. அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றது.
அந்தப் பெரிய எலி ஒரு பக்கோடாவை எடுத்துக்கொண்டு அதன் வலைக்குச் சென்றது.
அந்த சின்ன பூனை 'மியாவ், மியாவ்' என்றது.
சித்தார்த் அந்த பூனைக்கு வீட்டிலிருந்து பால் கொண்டுவந்தான்.
அவர்கள் அந்த பூனையோடு விளையாடினார்கள்.
மரத்திலிருந்த அந்த பெரிய கழுகு ரொம்ப தூரம் பறந்து சென்றுவிட்டது.