என் இளைய மாமா திருமணம் செய்துகொள்கிறார்.
திருமணம் கிராமத்தில் நடைபெறுகிறது.
நாங்கள் அனைவரும் திருமணத்திற்குப் போகிறோம்.
நாங்கள் ரயில் மூலம் செல்கிறோம்.
நாங்கள் முதலில் ரயில் நிலையத்திற்கு வருகிறோம்.
என் தந்தை, அம்மா, என் சகோதரன் மற்றும் நான்.
எங்களிடம் ஒரு பெரிய பை மற்றும் இரண்டு சிறிய பைகள் உள்ளன.
எங்களிடம் சிவப்பு தண்ணீர் பாட்டில் உள்ளது.
தொடர்வண்டி இன்னும் வரவில்லை.
பல மக்கள் வருகிறார்கள்.
அவர்கள் அனைவரும் தொடர்வண்டிகாகக் காத்திருக்கிறார்கள்.
குடும்பத்தில் மற்றவர்கள் எங்கே?
அங்கே! என் தாத்தாவை பார்த்தேன்.
அவர் மெதுவாக நடக்கிறார்.
அவர் எங்களை தேடுகிறார்.
அவருக்கு பின்னால் என் பாட்டி வருகிறார்.
எனக்கு தாகமெடுக்கிறது.
எனக்கு குளிர் பானம் வேண்டும்.
என் சகோதரன் பசியோடு இருக்கிறான்.
அவனுக்கு சிப்ஸ் சாப்பிட வேண்டும்.
"காத்திருங்கள்," என்கிறார் என் அம்மா. " நாங்கள் ரயிலில் கூட இல்லை.
நீங்கள் பசியாக இருந்தால் என்னிடம் இனிப்பு இருக்கிறது. நீங்கள் தாகமாயிருந்தால் என்னிடம் தண்ணீர் இருக்கிறது.
ஆனால் தொடர்வண்டி வரும்வரை காத்திருங்கள். "
என் தாத்தாவிடம் ஒரு சிறிய பை உள்ளது.
அவரிடம் ஒரு குச்சி உண்டு.
என் பாட்டியிடம் பெரிய பை உள்ளது.
அதில் சாப்பிட பல நல்ல பொருட்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.
என் குண்டான அத்தை வந்துவிட்டாள். அவளுடைய ஒல்லியான கணவனும் இங்கே இருக்கிறார்.
அவர்களுடைய கைப்பெட்டி ஆடைகள் நிறைந்தது. அவர்கள் இருவரும் உடுத்துவதற்கு விரும்புவார்கள்.
அங்கே ஒரே பெரிய சத்தமாக இருக்கிறது. தொடர்வண்டி வருகிறது. தொடர்வண்டி வருகிறது!
எல்லோரும் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். எங்கே திருமணம் செய்துக்கொள்ள போகிற இளைஞன்?நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர் எங்கே?
என் தந்தை எனது மாமாவை பார்க்கச் செல்கிறார். என் தாத்தாவும் பார்க்கிறார்.
என் அம்மா கவலைப்படுகிறாள். ஆனால் என் பாட்டி சிரிக்கிறாள்.
"அவன் இருக்கிறான்!" பாட்டி கூறுகிறார்.
என் மாமா எங்களை நோக்கி வருகிறார். "மிகவும் வருந்துகிறேன், மிகவும் வருந்துகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
நாங்கள் அனைவரும் தொடர்வண்டி ஏறினோம்.
தொடர்வண்டி ரயில் நிலையத்தை விட்டு செல்கிறது.