சச்சு, மித்து, ஈமான் மற்றும் சாம்மீ விளையாடுவதற்கு தயார் ஆனார்கள். சாம்மீ கூறினான், “காத்திருங்கள்! நான் என் பந்தை எடுத்து வருகிறேன்."
சாம்மீ தன் அறைக்குள் விரைந்தான்.
அட டா!
அவனுடைய அறை பெரிய
குளறுபடியாக இருந்தது.
சாம்மீ பந்தை எங்கு தேட வேண்டும்?
பந்து அவன்
படுக்கையில்
இருக்கிறதா?
இல்லை,
அங்கு இல்லை!
பந்து அவனது
மேசையில் இருக்கிறதா?
இல்லை,
அங்கு இல்லை!
சச்சு அழைத்தான், "சாம்மீ, சீக்கிரமாக வா!"
சாம்மீ தன் அறையில் இருந்து
திரும்பி கத்தினான், “பொறுங்கள்!
என் பந்தை என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லை!”
பந்து துணிமணி அடுக்கு அருகில் உள்ளதா? ஆடைகளுக்கு அடியில் உள்ளதா?
இல்லை!
பந்து இங்கேயும் இல்லை!
சச்சு, மித்து மற்றும் ஈமான் கத்துகிறார்கள்.
"நாங்கள் சலித்துவிட்டோம். நாங்கள் இனி காத்திருக்க விரும்பவில்லை! சாம்மீ, நாங்கள் கிளம்புகிறோம்!”
சாம்மீக்கு தன் மேல் கோபம். அவன் தனது பந்தை எங்கு தேடியும் காணவில்லை!
ஆனால் அவனது அறை நிச்சயமாக சுத்தமாக இருக்கிறது...
... அலமாரியில் உயரத்தில்
உள்ள அந்த பெட்டியைத் தவிர...
பார்!
இதோ பந்து!
அடுத்த நாள், சாம்மீ தனது நண்பர்களிடம் சென்றான். இன்று, பந்து விளையாட்டுக்கு தயாராக உள்ளது!