இந்த குட்டி டைனோசர் பேரு ஆகாஷ். இது பச்சை கலர்ல நீளமான வாலோட அழகா இருக்கு, இல்ல? ஆகாஷ் தன்னோட அம்மா, அப்பாவோட ஒரு பாலைவனத்துல வசித்து வந்தது. ஆகாஷ் குட்டி இல்லையா? அதனால குறுகுறுப்பும் அதிகம். அதோட அம்மாவும் அப்பாவும் ஆகாஷ் கிட்ட பாலைவனத்துல தனியா சுத்த வேண்டாம்;
தொலைஞ்சு போய்விடுவே’ அப்படின்னு எப்பவுமே சொல்லுவாங்க. ஆனா ஆகாஷுக்கு பாலவனத்தப் பத்தி ஒண்ணுமே தெரியாது. அதனால அங்க இருக்குற ஆபத்துக்கள் பத்தி அது அதிகமா கவலைப்படல.
ஆகாஷுக்கு ஒரு நல்ல தோழன் பான்டி. பான்டி கூட பாடி ஆடி பொழுதை
கழிக்கறதுக்கு ஆகாஷுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆகாஷுக்கு சந்தோஷமா இருக்கறப்பல்லாம் அது பாடும்; பாட்டுக்கு ஏற்றமாதிரி அதோட தோழன் பான்டி ஆடுவாரு.
ஒருநாள் ஆகாஷ் பாடிண்டே வரச்சே வழி தவறி ரொம்ப தூரம் பாலைவனத்துக்குள்ள போயிடுத்து. அது மட்டும் தனியா இருந்ததுனால அதுக்கு ரொம்ப பயமா போயிடுத்து. அதுக்கு தன்னோட அம்மா அப்பா சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது. வானத்துல மேகங்கள் கருப்பா மாற ஆரம்பிச்ச உடனே அதுக்கு
பயம் அதிகமாச்சு.‘யாராச்சும் உதவி பண்ணுங்க’ ன்னு சத்தம் போட்டு கூப்பிட்டு, அழ ஆரம்பிச்சுது. அது ரொம்ப தூரம் வந்துட்டதால அது கூப்பிட்டது யாருக்கும் கேட்கல.
‘திரும்ப என்னை எங்க அம்மா அப்பா கிட்ட கூட்டிகிட்டு போகற யாரையாச்சும் நான்
சந்திக்கணும், சாமி’ ன்னு ஆகாஷ் கடவுள் கிட்ட வேண்டிக்கும்போது, பான்டியைப் பார்த்தது. சந்தோஷத்துல குதிச்சுது; கூச்சல் போட்டுது. ‘ஓ! பான்டி! நல்லகாலம் நீங்க இங்க வந்தீங்க. கடவுளுக்கு நன்றி! நான் வழிய தவறவிட்டுட்டேன்.
எங்க அம்மா அப்பா கிட்ட என்னை கூட்டிகிட்டு போங்க, தயவு செஞ்சு!’ ன்னு கேட்டுது.
‘இன்னிக்கு நீங்க என்னைக் காப்பாத்தினீங்க. நீங்க சொல்ற மாதிரி எங்க அம்மா அப்பா பேச்சை எப்பவும் மீற மாட்டேன்’ அப்படின்னு சொல்லித்து.
பான்டி வழி காட்ட, ஆகாஷ் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் வீடு வந்து சேர்ந்தது.
கதை முடிந்தது!