பள்ளியில் ஒரு ஆசிரியர் மதிய உணவிற்கு பிறகு தூங்கிவிடுவது வழக்கம்.
மாணவர்கள் அவரை தூங்குமூஞ்சி வாத்தியார் என்று கேலி செய்து கொண்டிருப்பார்கள்.
இதனை சமாளிக்க அவர் நான் தினமும் கனவுலகத்திற்கு சென்று பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாக கூறுவார்.
ஒருநாள் அந்த ஆசிரியர் வரும்போது அனைத்து மாணவர்களும் தூங்குவது போல நடித்து கொண்டு இருந்தார்கள். ஆசிரியருக்கு கோபம் வந்தது.
மாணவர்கள் நாங்களும் கனவுலகத்திற்கு சென்றோம் என்று ஆசிரியருக்கே பாடம் கற்பித்தார்கள்.