thoongu moonji beema

தூங்கு மூஞ்சி பீமா

நம்மில் அநேகருக்கு இருக்கும் பிரச்சணை பீமாவுக்கும் இருந்தது. காலையில் நேரதிற்க்கு எழும்ப முடியவில்லை. ஓரூ குட்டி நன்பன் பீமாவிற்க்கு உதவி செய்தது. எப்படி தெரியுமா?

- Jemima Aaron

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பீமாவுக்கு தூங்க அதிக விருப்பம். அவனால் காலையில் பொழுதோடு எழுந்திருக்க முடியாது.

ராமு, அவன்  துணி வெளுப்பவன், பெரும்பாலும் பீமாவைத் திட்டுவான்.

ஒரு நாள், கௌரி என்ற பசு  கேட்டது, "பீமா, நீ ஏன் மிகவும் வருத்தமாக இருக்கிறாய்?" என்று.

பீமா கூறினது, "என்னால் காலையில் எழுந்திருக்க முடியவில்லை, ராமு ஒவ்வொரு நாளும் என்னை சத்தமிடுவார்.  நீ என்னை ஒவ்வொரு காலையிலும் எழுப்புவாயா?"

"சரி, நான் உன்னை எழுப்புகிறென்," என்றது கௌரி. அடுத்த நாள் காலை, கௌரி சத்தமிட்டது, ஆனால் பீமா எழுந்திருக்கவில்லை.

மாலையில் ஆற்றில் இருந்து திரும்பி வருகையில், பீமா மோதி என்ற நாயை சந்தித்தது.

"என்னால் காலையில் எழுந்திருக்க முடியவில்லை, மோதி. நீ என்னை  ஒவ்வொரு காலையிலும் எழுப்புவாயா? "

"சரி, நான் உன்னை எழுப்புகிறென்," என்றது மோதி. அடுத்த நாள் காலை, மோதி அதிகமாக குலைத்தது. ஆனால் பீமா எழும்பியதா? இல்லை இயா!

அன்று மாலையில் பீமா சீனு என்ற சேவல் கோழியை சந்தித்தது.

அது சீனுவைப் பார்த்து, "நீ காலையிலிருந்தும், எல்லோரும் எழுந்திருக்கிறாய். நீ என்னையும் எழுப்புவாயா? "

சீனு ஒப்புக்கொண்டது. அடுத்த நாள் காலை, சீனு நீண்ட நேரம் உரத்த குரலில் கூவினது, ஆனால் பீமா எழுந்திருக்கவில்லை.

அடுத்த நாள் மாலை, பீமா காளு என்ற காகத்தை பார்த்தது.

"காளு, தயவு செய்து நீ காலையில் என்னை எழுப்புவாயா ?" என்று கேட்டது.

"கண்டிப்பாக. நான் காலயில் சத்தமாக கத்தி உன்னை எழுப்புவேன்"

பீமா சோகமாக இருந்தது.

அடுத்த நாள் காலை, ஒரு ஈ வந்து அதின் மூக்கில் உட்கார்ந்தது.

"ஆஹா ...ச்சூ  .....அச்சூ ... அஷுஹூ!" பீமா ஒரு பெரிய தும்மல் போட்டு எழும்பியது

"ஒ! நான் எழுந்து விட்டேன். நான் எப்படி விழித்தேன்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

"நான் உன்னை விழிக்க செய்தேன்," என்று ஈ சொன்னது, "ஒவ்வொரு காலையிலும் நீ இப்படி என்னைப் எழுப்புவாயா?"

"கண்டிப்பாக" என்று அந்த ஈ சொன்னது. பீமாவிற்க்கு அதிக மகிழ்ச்சி. இதற்கு பிறகு  ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருப்பது அதற்க்கு பிரச்சினையாக இருக்காது!