டாமீ என்னோட செல்ல நாய்க்குட்டி.
எனக்கு டாமீ என்றால் ரொம்ப இஷ்டம்.
இவன் தான் ரோஹன்.
என் நெருங்கிய நண்பன்.
என்னோட வகுப்பில் தான்
இவனும் படிக்கிறான்.
ரோஹன் ஒரு பெரிய பூனை வளர்க்கிறான்.
அது தான் டிங்கூ.
டிங்கூ ஒரு கோவக்காரி.
டாமீயும் நானும் டிங்கூவிடம் போவதில்லை.
அவ தான் கோவக்காரி ஆச்சே! அவளை பூனைக்குட்டி என்று சொல்லாமல் புலிக்குட்டி என்று தான் கூப்பிடுவோம்.