இந்த மரம் தனது வளர்ச்சி பற்றி நினைத்து கொண்டு இருந்தது
விதையாக மண்ணில் புதைந்து, இளம்தளிர் ஆக மண்ணை பிளந்து, செடியாய் வளர்ந்து, மரமாய் வந்தது.
தனது கிளையில் கூடு கட்டி குஞ்சு பொறித்தத்தை நினைத்தது
தனது மரத்தின் பழங்கள் மற்றும் அதன் சுவையை நினைத்து பெருமிதம் கொண்டது
இப்படியே தனது வாழ்வில் நடந்த அனைத்தையும் நினைத்து கொண்டே இறுதி நாட்களை நெருங்கியது...