இதோ! இந்தக் குட்டிப் பையனின் பெயர் கியான்.
ஆனால் அவனுக்கு இன்னும் நிறைய பெயர்கள் உண்டு.
அம்மா அவனை லட்டு என்று அழைப்பார்.அவன் மிக இனியவன் என்று கூறுவார் அம்மா.
அப்பா அவனை அழைப்பதோ வேடூ. அப்பா அவன் வேடிக்கையானவன் என்பார்.
பாட்டி அவனை அழைப்பது மியாவ் மணி. அவன் தோல் பூனையைப் போல் மென்மையானது என்பார் அவர்.
தாத்தா அவனை முயல்குட்டி என்று கூப்பிடுவார். அவனுடைய இரண்டு பற்களை மட்டும்தான் தன்னால் பார்க்க முடிகிறது என்பார் அவர்.
இரா அக்கா அவனை குறும்புக்குட்டி என்று கூப்பிடுவாள்.
அவள் கியான் ஒரு குட்டி போக்கிரி என்பாள்.
ஸாஹில் அண்ணன் அவனை கூப்பிடுவதோ சண்டிக்குதிரை... ஏனென்று தெரியவில்லை! கியான் ரொம்ப சண்டித்தனம் செய்வதாக சொல்வான் அண்ணன்.
ஆனால் கியான் குறும்புத்தனம் செய்துவிட்டு எங்கேயாவது ஒளிந்து கொள்ளும் போது எல்லோரும் அவன் மேல் கோபமாக இருப்பார்கள்.
அப்போது எல்லோரும் கத்துவது...
கியாஆஆஆன்!
உங்கள் செல்லப் பெயர்கள் என்ன?