“அய்யோ!தண்ணீர் காலி!
இப்போ இந்த டயர்ல பஞ்சர் எங்க இருக்குன்னு எப்படிக் கண்டுபிடிப்பேன்?”
“எல்லாக் குழாயும் வறண்டு போய்க் கிடக்கு… கண்ணுக்கெட்டின வரை ஒரு அடிகுழாயக் கூடக் காணோம்.”
“உனக்கு தண்ணீர் கிடையாது, போ!”
“காசு குடுத்துட்டு வாங்கிக்கோ. எதுவும் இலவசமா கிடைக்காது!”
“ஏ, தண்ணி லாரீ! நிறுத்துங்க, நிறுத்துங்க!”
“எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா? இப்படிக் கஷ்டம் வரும்போது பாட்டு பாடணும்னு அப்பா சொல்லியிருக்காரு...”
“மழைக் கடவுளே! மழை பெய்ய வை.”
“ஆஆஆஆஆஈஈஈஈஈஈ!” “ஐயோ! இவன் பாடுறத சகிக்க முடியலையே!”
மழை பெய்யத் தொடங்கியது!
கடுபட் தண்ணீரைச் சேகரித்தான்.
தன் கடைக்கு ஓடிப்போய் பஞ்சர் ஒட்டினான்.
“சரியான ஆளுதான் நீ கடுபட் தாஸ்! மழை பெய்ய வெச்சதுக்கு நன்றி.”
“தயவுசெஞ்சு தண்ணிய சேமிச்சு வைங்க. இல்ல, அதையும் பாட்டா பாடவா… ம்ம்ம்?”
கடுபட் தாஸ்
பிரபல பாடகர் கர்தப் தாஸின் மகனான கடுபட் தாஸ், இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறான். அப்பாவைப் போலவே அவனும் படுமோசமான பாடகன். இந்த விசயம் அவனைத் தவிர எல்லோருக்கும் தெரியும். பலதரப்பட்ட சிறிய வேலைகளைச் செய்து பிழைப்பை நடத்தும் கடுபட், தன் பிரச்சினைகளைப் பெரும்பாலும் பாடியே தீர்த்துவிடுவான். அதாவது, பெரும்பாலும் அப்படித்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.