ஏதோ உனத்தியைத் தொடர்ந்து வருகிறது.
இது அழுக்கு.
இது துர்நாற்றம்.
இது ஒரு மிருகம்!
உனத்தி நன்றாக ஓடுவாள்.
மிருகம் நன்றாக துரத்தும்.
உனத்தி குதிப்பதில் மேம்பட்டவள்.
மிருகம் தெறிப்பதில் மேம்பட்டது.
உனத்தி ஏறுவதில் மிகச் சிறந்தவள்.
மிருகம் தோண்டுவதில் மிகச் சிறந்தது.
உனத்திக்கும் மிருகத்திற்கும் பாடப்பிடிக்கும்!
உனத்திக்கு வீட்டிற்கு போக நேரம் ஆகி விட்டது.
அந்த அழுக்கு, துர்நாற்ற மிருகமும் வீட்டிற்கு போக விரும்பியது!
"அழுக்கு, துர்நாற்ற மிருகத்திற்கு வீட்டில் இடம் இல்லை!" என்றார் அம்மா.
உனத்தியும் மிருகமும் பதுங்கிச்செல்வதில் வல்லவர்கள்.
உனத்தி அழகிய ஆடைகள் அணிவதில் சிறந்தவள்.
மிருகத்திற்கு அழகிய ஆடைகள் எல்லாம் அணியத் தெரியாது.
உனத்தியும் மிருகமும் குமிழிகளில் ஒளிந்து இருப்பதில் கெட்டிகாரர்கள்.
மிருகம் அழுக்காக இல்லை.
மிருகத்திடம் துர்நாற்றம் இல்லை.
இந்த மிருகம் சுத்தம் ஆகவும் அழகு ஆகவும் இருக்கிறது.