சப்பாத்தி வட்ட வடிவமானது.
பிரெட் பஜ்ஜி முக்கோணமாக இருக்கும்.
பர்ஃபி சதுர வடிவமானது.
முறுக்கு ஒரு சுருள் வட்டம் போன்றது.
வடை ஒரு வளையம் போல் இருக்கிறது.
பதிஷப்டா உருளை வடிவமானது.
பதிஷப்டா என்பது மைதா மாவு, தேங்காய் மற்றும் வெல்லம் கலந்து தயாரிக்கப்படும் வங்காள இனிப்பு.
வௌவால் மீனை நடுவில் வெட்டினால்
அறுகோணமாக இருக்கும்.
ஓரத்திலிருந்து மடித்த தோசையின்
வடிவம் ஒரு கூம்பு போல் இருக்கும்.
அல்வாவுக்கு வடிவம் கிடையாது.
அது நாம் கொடுக்கும் வடிவத்தை எடுத்துக் கொள்ளும்.
இவை எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு உணவு அரக்கன் ஆகி விட்டன.
இந்த உணவு அரக்கனை நான் தட்டைச் சுற்றித் துரத்துகிறேன்.
'கறுக் முறுக்' என்று கடித்தும் மென்றும் சுவைத்தும் சப்புக் கொட்டிக் கொண்டும் எல்லாவற்றையும் சாப்பிடுகிறேன்!