unniyum inniyum

உன்னியும் இன்னியும்

கோடையில் உன்னி தனது பொம்மைகளுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறான். அந்த விளையாட்டு சாலித்துப்போக ,புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறான். பக்கத்து வீட்டு இன்னிக்கு எப்போதும் சலிப்பதில்லை. இன்னி எப்படித்தான் நேரத்தைச் செலவிடுகிறாள் என்று நினைக்கிறீர்கள்?

- கொ.மா.கோ. இளங்கோ

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சூப்பர்! கோடைகாலம் தொடங்கி விட்டது!

கோடை

விடுமுறையில்,

குழந்தைகள்

பள்ளிக்குச்

செல்ல வேண்டாம்.

தங்கள் விருப்பப்படி நீண்டநேரம் வரைத் தூங்கலாம்!

இன்று, கோடை விடுமுறையில்

முதல் நாள்.

உன்னி,

நாள் முழுவதும் விளையாட

விரும்பினான்.

"இன்னி, நீ என் வீட்டுக்கு விளையாட வருகிறாயா?" என்று கேட்டான், உன்னி.

"நான், எனக்குப் பிடித்த ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்," என்றாள், இன்னி.

மதிய வேளையில்கூட உன்னி விளையாடிக் கொண்டிருந்தான்.

"ஏய் இன்னி, என்னுடன் வந்து விளையாடு!"

உன்னி, மறுபடியும் அழைத்தான்.

“நான்தான் சொன்னேனே, உன்னி! மிகமுக்கியமான

புத்தகம் வாசித்துக்

கொண்டிருக்கிறேன்!" என்றாள், இன்னி.

சூரியன் மறையும்

நேரம் வந்தது.

உன்னி, தனியாக விளையாடுவதில் களைத்துப் போனான்.

“என் வீட்டிற்கு வா, இன்னி! என்னிடம் நிறைய பொம்மைகள் இருக்கின்றன! ” என்றான்.

"நான், மிகவும் பிடித்தமான

ஒரு புத்தகம் வாசிக்கிறேன்,உன்னி!"

உன்னி வெறுத்துப்போய் கேட்டான்,

"அந்தப் புத்தகத்தில் அப்படியென்ன சுவாரஸ்யம் புதைந்துள்ளது?"

“நான் கண்டுபிடித்தவுடன் சொல்கிறேன்!”

உன்னி, இன்னி படித்துக்கொண்டிருந்த மரத்திற்கு அருகில் சென்றான்.

“அந்த புத்தகத்தில் என்னதான் இருக்கிறது?” என்று கேட்டான்.

"நான், அதில் ஓர்

இளவரசியைக் காப்பற்ற முயற்சிக்கிறேன்,"

என்றாள், இன்னி.

“அப்படியா? எங்கே?"

உற்சாகம் அடைந்த உன்னி,

“எனக்குக் காண்பி!" என்றான்.

பிறகு, உன்னியும் இன்னியும் சேர்ந்து அரக்கர்களுடன் சண்டையிட்டார்கள்.

கடைசியில், இருவரும் சேர்ந்து இளவரசியை மீட்டார்கள்!

உன்னி, மீதமுள்ள

விடுமுறை நாட்களைக் கழிக்க

இன்னியின் வீட்டுக்குச்

செல்கிறான்..

…இருவரும் சேர்ந்து புத்தகம் படிக்கிறார்கள்.