uzhipe athirstam

உழைப்பே அதிர்ஷ்டம்

நிலத்தில் கிடைத்த பெரும் புதையல்.

- R. Saravanan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார்.

தம் பிள்ளைகள் பொறுப்பிள்ளாமல் இருப்பதை நினைத்து கவலையாக இருந்தார்.

ஒருமுறை தம் பிள்ளைகளை அழைத்து நிலங்களை பிரித்து கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் அந்த நிலங்களில் ஓரிடத்தில் ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார்.

அதை தேடி எடுத்து கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள்.

அதன்பின் அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தை தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகன் தன் நிலத்தை தோண்ட ஆரம்பித்தான்.ஒரு அடி இரண்டு அடிகள் தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை.

பின் மூவரும் சேர்ந்து மற்ற நிலங்களை தோண்ட ஆரம்பித்தார்கள்.ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

நிலங்கள் ,தோண்டிய பிறகு வேளாண்மை செய்வதற்கு ஏற்றதாக இருந்தது.

ஏமாறிய மூவரும் தன் தந்தை மேல் கோவம் இருந்தாலும் தங்கள் நிலங்களில் நீர் பாய்ச்சினார்கள், விதை விதைத்தார்கள்.உழைப்பு வீண் போகுமா?

ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில்

அமோக விளைச்சல்  .அறுவடை செய்து  விற்றதில் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.