யாரோடு யாரோடு விளையாடலாம் ?
நண்பர்களோடு நாம் விளையாடலாம்.
என்ன விளையாட்டு விளையாடலாம்?
நாம் கற்கள் கொண்டு விளையாடலாம்.
யாரோடு யாரோடு விளையாடலாம் ?
நண்பர்களோடு நாம் விளையாடலாம்.
என்ன விளையாட்டு விளையாடலாம்?
நாம் ஊஞ்சல் ஆடி விளையாடலாம்.
யாரோடு யாரோடு விளையாடலாம் ?
நம் தங்கையோடு நாம் விளையாடலாம்.
என்ன விளையாட்டு விளையாடலாம்?
கயிற்றை தாண்டி குதித்து விளையாடலாம்.
யாரோடு யாரோடு விளையாடலாம் ?
நம் தம்பிகளோடு நாம் விளையாடலாம்.
என்ன விளையாட்டு விளையாடலாம்?
நாம் சறுக்கு மரம் ஏறி விளையாடலாம் .
யாரோடு யாரோடு விளையாடலாம் ?
நம் அக்காவோடு நாம் விளையாடலாம்.
என்ன விளையாட்டு விளையாடலாம்?
நாம் புதிர்கள் போட்டு விளையாடலாம்.
யாரோடு யாரோடு விளையாடலாம் ?
உறவினரோடு நாம் விளையாடலாம்.
என்ன விளையாட்டு விளையாடலாம்?
நாம் கன்ணாம்பூச்சி
விளையாடலாம்.
யாரோடு யாரோடு விளையாடலாம் ?
ஒரு நண்பனை தேடுவேன் விளையாடவே!
யாரும் இல்லை எனில் என்செய்வேன்?
பந்தை உதைத்து விளையாடுவேன்...!