வண்டுகள் ஆளும் பூமியில் காலடித் தடங்களே இல்லையே!
எலி மனிதர்கள் நகரத்தில்குழிமுயல்கள் நாயை வேட்டை ஆடுதே!
பனிக்கூகைகளின் நிலத்தில் பகலும் இரவும் தலைகீழாம்!
பாட்டுக்குருவியின் ஊரிலேவேறு சத்தங்களே கேட்கக் கூடாதாம்!
மனிதன் சீறும் உலகத்தில் எல்லாம் மண்ணுக்கடியிலே போய்விடுமாம்!
வண்ண மீன்களின் ராஜ்ஜியத்தில் கண்ணெட்டும் வரையில் கடல்தானாம்!
பௌர்ணமி தேயாத புவியில் வௌவால்களின் திருவிழாவாம்!
புள்ளி மான்களின் நாட்டிலே
மரவெட்டிகளுக்கு இடமில்லையே!