பட்டம் பட்டம் பட்டம் பார் !
வானில் பறக்கும் பட்டம் பார் !
பட்டத்தில் உள்ள வட்டங்கள் பார் !
பட்டத்தின் நீண்ட வால் பார் !
வட்டத்தில் பல வண்ணம் பார் !
வண்ணம் தரும் எழில் பார் !
எழிலாய் பறக்கும் பட்டத்தில்
ஏறி வானில் பறக்கலாம்
வானின் நீளம் அளக்கலாம் !