varudandhira mudivettu naal

வருடாந்திர முடிவெட்டு நாள்.

ஸ்ரீங்கேரி ஸ்ரீனிவாசுக்கு தலைமுடி ரொம்ப நீளம். ஆண்டுதோறும் வரும் முடிவெட்டு நாளன்று முடி திருத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அன்று எல்லோருக்குமே வேறு வேலை இருந்தது. அவனுக்கு யார் உதவி செய்தார்கள் தெரியுமா? உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது! படித்து மகிழவும்!

- S. Ramachandran

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஸ்ரீங்கேரி ஸ்ரீநிவாஸ் ஆண்டுக்கு ஒரு முறை தான் முடிவெட்டிக்கொள்வான். இன்று தான் அந்த வருடாந்திர முடிவெட்டு நாள்.

எப்பொழுதும் போல ஸ்ரீங்கேரி ஸ்ரீனிவாஸ் தன் வீட்டில் இருந்து ஊர் நாவிதன் கடைக்குப் போனான்.

அனால் நாவிதன், "இவ்வளவு முடியா? இதை வெட்ட இன்று எனக்கு நேரம் இல்லை!" என்றான்.

முகம் வாடி, ஸ்ரீங்கேரி ஸ்ரீனிவாஸ் தன மனைவியின் உதவியையே நாடலாம் என்று நினைத்து வீடு  திரும்பினான்.

அனால் மனைவி, "இவ்வளவு முடிய வெட்ட யாருக்கு நேரம் இருக்கு? இன்று முடியாது," என்றாள்.

ஸ்ரீங்கேரி ஸ்ரீனிவாசுக்கு கொஞ்சம் கோபம் தான். தனது நண்பன் தையற்காரனிடம் சென்றான்.

அனால் தையற்காரன், "இவ்வளவு நீள முடியை வெட்ட இன்று நேரம் இல்லை!" என்றான்.

கொஞ்சம் பதைபதைப்புடன் ஸ்ரீங்கேரி ஸ்ரீநிவாஸ் மற்றொரு நண்பனிடம் சென்றான். அவன் ஒரு தச்சன்.

தச்சனும், "இவ்வளவு நீள முடியா? இதை வெட்ட இன்று எனக்கு நேரம் இல்லை நண்பா," என்று சொல்லிவிட்டான்.

பாவம் ஸ்ரீங்கேரி ஸ்ரீநிவாஸ்! ஆண்டுக்கு ஒரு முறை தான் முடிவெட்டு. அதை செய்யவும் யாரும் வரமாட்டேன் என்கிறார்களே!

அழுதுக்கொண்டே, அந்த கிராமத்தின் அருகே உள்ள காடு வழியாக நடந்தான்.

ஒரு குகை பக்கமாக அமர்ந்து 'ஓ...'வென்று அழுதான்.

"இந்த நாளே முடிய போகுது. இன்னிக்கி முடி வெட்டுவேன்னு நான் எடுத்த முடிவ எப்படி நிறைவேத்துவேன்? கடவுளே, காப்பாத்து!"

இவன் போடும் சத்தத்தில் குகைக்குள் அமைதியாக தூங்கிக்கொண்டு இருந்த புலி முழித்துக்கொண்டது.

"உர்ர்ர்ர்ர்.." என்று உறுமிக்கொண்டு புலி ஸ்ரீங்கேரி ஸ்ரீநிவாசை நோக்கி பாய்ந்து வெளியே வந்தது.

பாவம் ஸ்ரீங்கேரி ஸ்ரீநிவாஸ்! அவனுக்கு எவ்வளவு பயம்னா... எவ்வளவு பயம்னா...  எவ்வளவு பயம்னா...

...அவன் தலையில் இருந்த அத்தனை முடியும் பயத்திலேயே உதிர்ந்து கீழே விழுந்து விட்டது!!

ஸ்ரீங்கேரி ஸ்ரீனிவாஸ் தன் வீடுவரை  ஓடியே சென்றான்.

புலி தூங்கிவிட்டது.

இனிமேல் சிலபல நாட்களுக்கு ஸ்ரீங்கேரி ஸ்ரீனிவாஸ் முடிவெட்ட வேண்டியதே இல்லை!