மிஸி கூரை வீட்டில் வாழ்கிறார்.
துலானி சதுர வீட்டில் வாழ்கிறான்.
இந்த வீடு செவ்வகமாக இருக்கிறது.
இந்த வீட்டின் மேற்கூரை முக்கோணமாக இருக்கிறது.
இந்த மனிதர் தன் வீட்டை தானே கட்டுகிறார்.
இந்த வீடு புதியது.
இந்த வீடு பழையது.
நான் இந்த வீட்டில் வாழ்ந்திருக்கலாம் என ஆசைப்படுகிறேன்.