veetriku selgirom

வீட்டிற்கு செல்கிறோம் - சிறுவர் பாடல்

How many different ways are there to get home? Find out in this hoppity rhyme!

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வலது! இடது! வலது! இடது!

வீட்டிற்குச் செல்கிறோம்

ஒருவர் பின்னால் ஒருவராய்

நடந்து செல்கிறோம்

மியாவ்! மியாவ்! மியாவ்! மியாவ்!

வீட்டிற்குச் செல்கிறோம்

பூனை ஒன்று தொடர்ந்து வர

குதித்துச் செல்கிறோம்

வெள! வெள! வெள! வெள!

வீட்டிற்குச் செல்கிறோம்

நாய் ஒன்று தொடர்ந்து வர

துள்ளிச் செல்கிறோம்

மா! மா! மா! மா!

வீட்டிற்குச்  செல்கிறோம்

பசு ஒன்று தொடர்ந்து வர

தாவிச் செல்கிறோம்

றோர்! றோர்! றோர்! றோர்!

வீட்டிற்கு விரைகிறோம்!

புலி ஒன்று துரத்திப் பிடிக்க

ஓடிச் செல்கிறோம்!