vegamaga selvathu yaar

வேகமாகச் செல்வது யார்?

எந்த விலங்கு வேகமாகச் செல்லும், எது மெதுவாகச் செல்லும்? எந்த விலங்கைவிட எந்த விலங்கு வேகமாகச் செல்லும் என்பதை குழந்தைகளுக்கு, இந்த புத்தகம் கற்றுத்தரும்.

- Palaniappan Meenakshisundaram

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

உலகிலேயே மெதுவாக செல்லும் விலங்கு

எதுவென்று உனக்குத் தெரியுமா?

ஆமை

ஆமையைவிட வேகமாகச் செல்லும்

விலங்கு எது?

பாம்பு

ஆமை, பாம்பைவிட வேகமாகச் செல்வது எது?

எலி

ஆமை, பாம்பு, எலியைவிட

வேகமாகச் செல்வது எது?

பல்லி

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லியைவிட

வேகமாகச் செல்வது எது?

யானை

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானையைவிட

வேகமாகச் செல்வது எது?

பூனை

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானை,

பூனையைவிட

வேகமாகச் செல்வது எது?

நரி

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானை,

பூனை,

நரியைவிட

வேகமாகச் செல்வது எது?

முயல்

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானை,

பூனை,

நரி,

முயலைவிட

வேகமாகச் செல்வது எது?

குதிரை

ஆமை,

பாம்பு,

எலி,

பல்லி,

யானை,

பூனை,

நரி,

முயல்,

குதிரையைவிட

வேகமாகச் செல்வது எது?

புலி