தின்னத்தின்னத் திகட்டாததஷேரி மாம்பழமாம்விடுமுறை. மாலையான பின்னேதீராமல் வீசுகின்ற குளிரான தென்றலேவிடுமுறை.
விழித்த பின்னும் தலையணையில் முகம் புதைத்து உறங்குவதாய் ஆடும் கபட நாடகமாம்விடுமுறை.முழுமையான சுதந்திரத்தைஅருமையாக அனுபவிக்கஎனக்காகக் கிடைத்ததனித்தீவே விடுமுறை.
படிப்பதை ஓரம் கட்டி விளையாட்டில் திளைக்கக்கிடைத்த பரிசுச் சீட்டாம்விடுமுறை.
தெருமுனையில் தின்னுகின்ற இனிப்பு புளிப்பு பானிபூரியும் கண்ணாமூச்சி ஆட்டத்தின்களிப்புமே விடுமுறை.
சட்டைப் பையில் கிணுகிணுத்து சடுதியில் மறையும் சில்லறையும் பள்ளிக்கூடங்களின் மாயாஜாலமுமே விடுமுறை.
விரைவாக ஓடுகின்ற காலம் இட்ட கட்டளையைகைகட்டிச் செய்திடும்விடுமுறை.
நொடியிலே வாயில் கரையும் இனிப்பான மிட்டாயின் பெயரே விடுமுறை!