கே.வி. பள்ளியில் இன்று விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம். வெல்வது யாரெனப் பார்த்திடலாம்.
தாளத்துக்கேற்ப நடைபோட்டு, லெஃப்ட், ரைட்! கோகியின் காலோ இடப்புறம்!
போட்டிகள் தொடங்குமுன் அணிவகுப்பு, சிரிக்கும் முகங்களைப் பாருங்கள்!
ஈஈஈ! ஜோஜோ கத்தினாள், ச்சீ ச்சீ ச்சீ!கபடியில் வியர்வைக் குளியல்தான்!
அஸ்க-லக்கா-ரிங்க-ரிங்கா! ஒவ்வொரு குழுவும் சத்தமிட, எங்கும் ஒரே கலகலப்பு!
தொடங்குது தொடர் ஓட்டப் பந்தயம், இம்முறையேனும் பீஜேவை வெல்வாளா ராணி?
மஞ்சுவால் ஓட முடியவில்லை, வீட்டிலே இருந்திடவும் மனதில்லை!
வாசுவின் வயிற்றிலே கடமுட! அவனால் அணியே தோற்றுவிட்டால்?
ஊதலின் ஒலியைக் கேட்டவுடன், ஓட்டக்காரர்கள் விரைந்தனரே! பீஜே கோபத்தில் கொப்பளிக்க,ராணியின் அணியோ முன்னணியில்!
எங்கும் சத்தம், ஆச்சரியம்! இம்முறை வென்றது ராணி அணி!
கோப்பைகள் பதக்கங்கள் வென்றவர்க்கே, பெருமையாய் உயர்த்திக் காட்டினரே!தோற்றவர் கொஞ்சம் வருந்திடுவார்,துயரில்லை நாளை நமதென்பார்!