ஒரு யானை தண்ணீர் குடிக்கப் போகிறது.
இரண்டு ஒட்டகசிவிங்கிகள் தண்ணீர் குடிக்கப் போகின்றன.
மூன்று எருமை மாடுகளும் நான்கு பறவைகளும் கூட தண்ணீர் குடிக்கப் போகின்றன.
ஐந்து கலைமான்களும் ஆறு காட்டுப் பன்றிகளும் தண்ணீரை நோக்கி நடக்கின்றன.
ஏழு வரிக் குதிரைகள் தண்ணீரை நோக்கி ஓடி வருகின்றன.
எட்டு தவளைகளும் ஒன்பது மீன்களும் தண்ணீரில் நீந்துகின்றன.
ஒரு சிங்கம் கர்ஜிக்கிறது. அதுவும் தண்ணீர் குடிக்க விரும்புகிறது. சிங்கத்தினால் பயப்படுபவர்கள் யார்?
ஒரு யானை சிங்கத்துடன் தண்ணீர் குடிக்கிறது.