என் பெயர் சீமோ.
எனக்கு நாங்கு நண்பர்கள்.
சீசூ, லெலெ, சீசா, அயான்டா எனும் நால்வர்.
சீசுவிற்கு கால் பந்து பிடிக்கும்.
லெலெவிற்கு நீச்சல் பிடிக்கும்.
சீசாவிற்கு கண்ணாமுச்சி விளையாட பிடிக்கும்.
அயாண்டாவிற்கு படிக்க பிடிக்கும்.
எனக்கா? அவர்களுக்கு எது பிடிக்குமோ அது எனக்கும் பிடிக்கும்!
சீசோவுடன் நான் கால் பந்து ஆடுவேன்.
லெலெவுடன் நான் நீச்சல் அடிப்பேன்.
சீசாவுடன் நான் கண்ணாமுச்சி ஆடுவேன்.
உனக்கு என்ன பிடிக்கும்? வா, வா! நாம் விளையாடலாம்!
எங்களுடன் கால்பந்தாட்டம் ஆட வா.
எங்களுடன் நீச்சல் அடிக்க வா.
எங்களுடன் கண்ணாமுச்சி ஆட வா.
எங்களுடன் படிக்க வா.