விரூம்ம் வ்ரூஊஊஊஊஊம்
ஜீரோ பார்த்துக்கோங்க
மோட்டார் சைக்கிள் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
மோட்டார் சைக்கிள் ஓட பெட்ரோல் தேவை.
ஆனால் மோட்டார் சைக்கிள் ஓடும்போது அதற்குள் என்னதான் நடக்கிறது?
மோட்டார் சைக்கிள், அடிப்படையில் மிதிவண்டி போன்றதேதான்.
ஆனால் மோட்டார் சைக்கிளில், அதில் உள்ள எஞ்சின் எல்லா வேலைகளையும் செய்கிறது.
இரண்டுக்கும் முக்கியமான வேறுபாடு, மிதிவண்டி நாம் கால்களால் மிதிப்பதால் ஓடுகிறது.
எஞ்சின்
மோட்டார் சைக்கிளின் எஞ்சினுக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
எஞ்சினில் மூன்று பாகங்கள் உள்ளன. உருளை, இயங்குதண்டு, மாற்றித்தண்டு
உள்ளே
மின்பொறி செருகி
வெளியே
உருளை
இயங்குதண்டு
மாற்றித்தண்டு
எஞ்சினில் உள்ளே வெளியே என்று இரண்டு பாதைகள் உள்ளன. அவை திறந்தும் மூடியும் எரிபொருள்(பெட்ரோல்+காற்று) கலவையை உள்ளே விடும், புகையை வெளியேற்றும்.
எஞ்சினைக் கிளப்ப, அதற்கு ஒரு உதை கொடுக்க வேண்டும்.
உதைக்கும்போது மாற்றித்தண்டு சுழலத் தொடங்கும்.
மாற்றித்தண்டு சுழல்கையில், அதோடு இணைக்கப்பட்ட இயங்குதண்டு உருளைக்குள் மேலும் கீழுமாய் செல்லும்.
சுழலும் மாற்றித்தண்டு இயங்குதண்டைக் கீழே இழுக்கையில், உள்-பாதை திறந்து, எரிபொருள் கலவை உருளைக்குள் வரத்தொடங்கும்.
தொட்டியில் இருந்து பெட்ரோல்
உள்ளே (மூடியிருக்கிறது)
உள்ளே (திறந்திருக்கிறது)
உள்ளே (திறந்திருக்கிறது)
வெளியே (மூடியிருக்கிறது)
சுழலும் மாற்றித்தண்டு இயங்குதண்டைக் கீழே இழுக்கையில், உள்-பாதை திறந்து, எரிபொருள் கலவை உருளைக்குள் வரத்தொடங்கும்.
உள்ளே (மூடியிருக்கிறது)
வெளியே (மூடியிருக்கிறது)
அதன்பின் மின்பொறி செருகி தீப்பொறி கிளப்பி...
மின்பொறி செருகி
...எரிபொருள் கலவை பட்டாசு போல் வெடிக்கும்.
இயங்குதண்டு அதிக விசையோடு கீழ்நோக்கி அழுத்தப்பட்டதும், மாற்றித்தண்டு இன்னும் வேகமாய்ச் சுழலத் தொடங்கும்.
உள்ளே (மூடியிருக்கிறது)
வெளியே (மூடியிருக்கிறது)
வெளியே (மூடியிருக்கிறது)
வெளியே (திறந்திருக்கிறது)
இப்போது, இயங்குதண்டு மீண்டும் மேல்நோக்கிச் செல்லும்போது வெளி-பாதை வழியாக புகையை வெளியேற்றும்.
உள்ளே (மூடியிருக்கிறது)
வெளியே (திறந்திருக்கிறது)
மாற்றித்தண்டு தொடர்ந்து சுழலும். அதனால் இயங்குதண்டு மீண்டும் கீழே செல்லும். எரிபொருள் கலவை உருளைக்குள் செல்லும். இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும்.
1. எரிபொருள் கலவை உள்ளே செல்கிறது
2. மின்பொறி செருகி
3. டமால்!
4. புகை வெளியே செல்கிறது
எஞ்சின் அணைக்கப்படும் வரை அல்லது எரிபொருள் தீரும் வரை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.
எஞ்சின் ஓடும்போது...
...மாற்றித்தண்டு தொடர்ந்து சுழலும்.
...மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தைச் சுழல வைக்கும்.
பின் சக்கரம் வண்டியை முன்னோக்கி செலுத்தும்.
...முன் சக்கரம் வண்டியைத் திருப்ப உதவும்.
எஞ்சினில் இருந்து வெளியாகும் புகை, பின்னாலிருக்கும் குழாய் வழியாக வெளியேறும்.
அடுத்தமுறை நீங்கள் மோட்டார் சைக்கிளில் ஏறும்போது, அந்த அற்புதமான இயந்திரத்துக்குள் என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்!
மோட்டார் சைக்கிளின் பாகங்கள்
முடுக்கி
பிரேக்
முகப்பு விளக்கு
எஞ்சின்
பெட்ரோல் தொட்டி
இருக்கை
பின் விளக்கு
புகைபோக்கி