vithavithamaana veedugal

விதவிதமான வீடுகள்

உயரமான வீடுகள், மர வீடுகள், தொங்கும் வீடுகள், பூமிக்கடியில் உள்ள வீடுகள் - உங்களைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள், பூச்சிகளின் வீடுகளுக்குப் போய்வரலாம், வாருங்கள்!

- Gayathri. V

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் பல உயிரினங்கள் வாழ்கின்றன.

பறவைகள் தங்கள் வீடுகளை மிக உயரத்தில் கட்டுகின்றன.

தேனீக்களும் அப்படித்தான் செய்கின்றன.

சிலந்திகள் வீட்டை பின்னிக்கொள்கின்றன.

சின்னஞ்சிறு கரையான்கள் உயரமான வீடுகளைக் கட்டுகின்றன.

நத்தைகளும் ஆமைகளும் எங்கு சென்றாலும் தங்கள் வீட்டையும் தூக்கிக்கொண்டே செல்கின்றன.

மீன்கள் நீரில் வாழ்கின்றன.

தவளைகளால் நீரிலும் நிலத்திலும் வாழமுடியும்.

எலிகளும் முயல்களும் பூமிக்கடியில் இருக்கும் வளைகளில் வாழ்கின்றன.

குரங்குகளும் மனிதக் குரங்குகளும் மரங்களைத் தங்களுடைய வீடாக ஆக்கிக்கொள்கின்றன.

கரடிகளும் ஓநாய்களும் குகைகளில் வாழ்கின்றன.

முதலைகள் சதுப்புநிலங்களில் வாழ்கின்றன.

மான்கள் காட்டில் வாழ்கின்றன.

புலிகளும் அங்கேதான் வாழ்கின்றன!

சில உயிரினங்கள் நமக்கு நெருக்கமாகவும் சில உயிரினங்கள் தொலைவிலும் வாழ்கின்றன.

ஆனால், உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நமக்கும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்று தெரியுமா?

ஒரு பெரிய வீடு

நாம் எல்லோருமே நமது வீடுகளை ஒரு பெரிய வீட்டுக்குள்தான் கட்டுகிறோம்: அதுதான் பூமி!