where is my mother

கீச்....கீச்...

சின்னப் பறவை தாயைக் காணத் தவிக்கின்றது. எதிர்ப்படும் அனைவரிடமும் நீங்களா என் தாய்..?" என விசாரிக்கின்றது. முடிவில் தாயைக் கண்டுகொள்கின்றது. சின்னப் பறவை தாயைக் காண என்ன செய்தது?

- Hemalatha Kanagalingam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சின்னப் பறவை கண் விழித்தது.

தாயைக் காணவில்லை..!

தாயைத் தேடிப் பறக்க முயன்றது.

பறக்க முடியாமல் கீழே விழுந்தது.

“கீச்....கீச்... நீங்கள் தானே என் அம்மா..?”

“கா.....கா.... நான் இல்லையே..!” என்றது காகம்.

“கொக்...கொக்... நான் இல்லை கொக்...!” என்றது கோழி.

‘எப்படிக்   கண்டுபிடிப்பது ....?’ யோசித்தது.

“க்வாக்.... க்வாக்...” வாத்து, தன் குஞ்சுகளைக கூப்பிட்டது.

‘நாமும் இப்படிக் கூப்பிட்டால் என்ன....?’

“கீச்....கீச்... கீச்....கீச்...” உரத்துக் கூப்பிட்டது சின்னப்பறவை.

தாய்ப்பறவை பறந்து வந்தது.

தாயோடு சேர்ந்து கொண்டது சின்னப்பறவை.

கீச்...... கீச்.......

பறவைகள் மகிழ்ச்சியோடு பறந்தன.

கீச்.... கீச்.... கீச்....