வெள்ளை பட்டாம்பூச்சி ஒன்று
வெள்ளை மேகங்களில்
இருந்து கீழே பறந்து வந்தது.
அப்பட்டாம்பூச்சி ஆறு,காடு,வயல் என்பவற்றைக் கடந்து பறந்து சென்றது.
திடீரென அது ஒரு காட்சியை பார்க்கின்றது .......
... அங்கே வண்ணவண்ண பட்டாம்பூச்சிகள் சில கூட்டமாக இருந்தது.
அவை அனைத்தும் சட்டையும் தொப்பியும் அணிந்து இருந்தன.
அவை ஒவ்வொன்றும் புத்தகப்பை ஒன்றையும் பேனை ஒன்றையும் வைத்திருந்தது.
வெள்ளை பட்டாம்பூச்சி வண்ண பட்டாம்பூச்சியிடம்
"நீங்கள் எல்லோரும் எங்கே செல்கிறீர்கள்?" என கேட்டது.
" நாங்கள் எல்லாரும் பாடசாலைக்கு போறோம். நீயும் எங்களுடன் வருகிறாயா?" என்று அவ் வண்ண பட்டாம்பூச்சி கேட்டது.
" ம்ம்ம் நானும் வாரேன்" என்று வெள்ளை பட்டாம்பூச்சி கூறியது.
"ஆனா உன் சட்டை எங்கே ?"
"உன் தொப்பி எங்கே ?"
உன் பை எங்கே ?"
"உன் பேனை எங்கே?"
என்று வண்ண பட்டாம்பூச்சிகள் கேட்டன.
" ஐயோ என்னிடம்
சட்டை,
தொப்பி,
பை,
பேனை இது எதுவுமே இல்லையே. "
"இப்ப நான் என்ன செய்றது?"
எனவே வெள்ளை பட்டாம்பூச்சி சந்தைக்கு செல்ல தீர்மானித்தது.
முதலில் அது சட்டை வாங்க கடைக்கு சென்றது
அங்குள்ள வெட்டுக்கிளியிடம்
"உங்களிடம் சிவப்பு சட்டை இருக்குதா?"
என கேட்டது.
வெட்டுக்கிளி
" ஆமாம், இதோ சிவப்பு பூக்களினால் செய்யப்பட்ட இந்த சட்டையை பாருங்கள்" என்று சொன்னது.
வெள்ளை பட்டாம்பூச்சி
சிவப்பு சட்டையை வாங்கியது.
பின்பு.......
அடுத்து, வெள்ளை பட்டாம்பூச்சி தொப்பி கடைக்கு சென்றது.
அங்குள்ள எறும்பிடம்
"உங்களிடம் நீல தொப்பி இருக்கிறதா?"
என்று கேட்டது.
எறும்பு "ஆம், இதோ இந்த நீல நிற பூக்களினால் செய்யப்பட்ட தொப்பியை பாருங்கள்" என்றது.
வெள்ளை பட்டாம்பூச்சி நீல தொப்பியை வாங்கியது.
பின்பு.....
வெள்ளை பட்டாம்பூச்சி பைகள் விற்கும் கடைக்கு சென்றது.
அங்குள்ள மஞ்சள் பறவையிடம் " உங்களிடம் பச்சை நிற பை இருக்கின்றதா?" என கேட்டது.
மஞ்சள் பறவை " ஆம், இதோ பச்சை இலைகளால் செய்த பையை பாருங்கள்" என்றது.
வெள்ளை பட்டாம்பூச்சி பச்சை நிற பையை வாங்கியது.
பின்பு....
வெள்ளை பட்டாம்பூச்சி பேனை வாங்க கடைக்கு சென்றது.
அங்குள்ள பச்சை தவளையிடம்
"உங்களிடம் மஞ்சள் நிற பேனை இருக்கின்றதா?" என்று கேட்டது.
பச்சை தவளை
"ஆம், இதோ இருக்கின்றது." என்றது.
வெள்ளை பட்டாம்பூச்சி மஞ்சள் நிற பேனையை வாங்கியது.
பின்பு....
வெள்ளை பட்டாம்பூச்சி சூரியகாந்தி தோட்டத்தில் உள்ள பாடசாலைக்கு பறந்து சென்றது.
அங்கு வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளுடன் சேர்ந்து விளையாடியது.