முன் ஒரு காலத்தில், இரண்டு சிறுவர்கள் இருந்தனர். ஒருவனின் பெயர் ராமு, மற்றொருவனின் பெயர் சோமு. ராமு நல்லவன், அன்பானவன். சோமு முரடன். அவர்களின் வீடுகள் அருகருகே இருந்தன. அவர்கள் ஒரே பள்ளிக்கு சென்று ஒரே வகுப்பில் படித்தனர்.
ராமுவிடம் ஒரு வாழை மரமும், சோமுவிடம் ஒரு மாமரமும் இருந்தது.
ரோமு அவன் மரமிடம் அன்பாகவும் இனிமையாகவும் பேசினான். நல்ல கதைகள் கூறினான்.
சோமு அவன் மரத்தை ஒரு பாரமாக நினைத்தான். அதனிடம் கடுமையான வார்த்தைகள் கூறினான்.
அதனால் ராமுவின் மரம் நன்றாக வளர்ந்து நிறைய பழங்கள் தந்தது.
சோமுவின் மரம் வாடி இறந்தது.
திருக்குறள்
அதிகாரம்: இனியவைகூறல்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.