அம்மு நாடகத்தில் தான் பேசவேண்டிய வசனங்களை சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பெரிய மாலதி மிஸ் குட்டி அம்முவிடம், “உன்னுடைய வரிகள் எல்லாம் ஞாபகம் இருக்கிறதா?“ என்று கேட்டார்.
“ராதா படபடவென சிறகடித்துப் பறந்தது,
பச்சைக்கிளி குவா குவா என அழுதாள்!
மகாராஜாவுக்கு கு... கு...குளிர்ந்தது,
மேஜை அவர்களே, சாப்பிட வாருங்கள்!”
ஏதோ சரியில்லையே!
“மகாராஜா படபடவென சிறகடித்துப் பறந்தது, மேஜை குவா குவா என அழுதாள்! ராதாவுக்கு கு... கு...குளிர்ந்தது, பச்சைக்கிளி அவர்களே, சாப்பிட வாருங்கள்!”
ஏதோ சரியில்லையே!
“மேஜை படபடவென சிறகடித்துப் பறந்தது, மகாராஜா குவா குவா என அழுதாள்! பச்சைக்கிளிக்கு கு... கு...குளிர்ந்தது, ராதா அவர்களே, சாப்பிட வாருங்கள்!”
இன்னும், ஏதோ சரியில்லையே!
“அம்மு, அடுத்தது நீதான், வா!” என்று மாலதி மிஸ் அழைத்தார்.
அம்மு மேடையில் ஏறி நின்று சொல்ல ஆரம்பித்தாள்.
“பச்சைக்கிளி படபடவெனசிறகடித்துப் பறந்தது, ராதா குவா குவா என அழுதாள்!மேஜையில் உணவு கு...கு...குளிர்ந்து போய்க் கொண்டிருக்கிறது,மகாராஜா அவர்களே, சாப்பிட வாருங்கள்!”
பார்வையாளர்கள் கைத்தட்டத் தொடங்கினர். அம்மு எல்லா வரிகளையும் சரியாகச் சொல்லிவிட்டாள்.